\v=7 \v~=எவனாகிலும் முப்பது நாட்கள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனிதனையானாலும் நோக்கி, எந்தவொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்செய்தால், அவன் சிங்கங்களின் குகையிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான உத்திரவிடவேண்டுமென்று ராஜ்ஜியத்தினுடைய எல்லா அதிகாரிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார்கள். \¬v