சங்கீதங்கள்
ஆசிரியர்
சங்கீதங்கள் உணர்ச்சிபாடலுக்குரிய மொழிநடையில் அமைந்திருக்கிற ஒரு கூட்டு பாடல்கள் ஆகும். இதை அனேக ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். தாவீது 73 சங்கீதங்களையும் ஆசாப் 12, சங்கீதங்களையும் கோராவின் புத்திரர்கள் 9 சங்கீதங்களையும் ஏதான் 1, சங்கீதமும், மோசே 1, 90 சங்கீதமும் எழுதியுள்ளார்கள் சில சங்கீதங்களின் ஆசிரியர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. சாலொமோனும் மோசேயும் தவிர மற்ற சங்கீதங்கள் தாவீதின் ஆட்சிக் காலத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆசாரியர்களும் லேவியர்களும் எழுதியவைகள்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 1440 க்கும் 430 க்கும். இடையில் எழுதப்பட்டது.
தனி நபர்களின் சங்கீதங்கள் மோசேயில் தொடங்கி பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி எருசலேமுக்கு வந்த காலங்கள் வரை எழுதப்பட்டு இருக்கிறது. இவைகள் மோசேயினாலும் தாவீதினாலும் சாலோமோனினாலும் எஸ்றாவினாலும் எழுதப்பட்டிருப்பதால் சங்கீதங்களை மாத்திரம் எழுதி முடிக்க ஆயிர வருடங்கள் ஆகியிருக்கிறது.
யாருக்காக எழுதப்பட்டது
தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கு செய்த அற்புதமான காரியங்களை இஸ்ரவேலர்களர்கள் ஞாபகத்தில் வைக்கவும் கர்த்தரை விசுவாசிக்கிற எல்லாருக்காகவும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
சங்கீதங்கள், தேவனையும் அவருடைய சிருஷ்டிப்பையும், யுத்தங்களையும், ஞானத்தையும் பாவத்தையும் தீமையையும் நீதியையும், நியாத்தீர்ப்புகளையும் மேசியாவின் வருகையைக் குறித்தும் பறைசாற்றுகின்றன. சங்கீதங்கள், தேவன் யார் என்றும் அவர் நமக்கு செய்த காரியங்களுக்கும் நன்மைகளுக்கா தேவனை ஸ்தோத்திரிக்க நம்மை உற்சாகப்படுத்துகின்றன. சங்கீதங்கள் தேவனுடைய மகத்துவங்களை வெளிப்படுத்துகின்றன, ஆபத்துக் காலங்களில் நமக்கு அவர் உண்மையுள்ளவர் என்று உறுதிப்படுத்துகின்றன, அவருடைய வசனங்களின் ஆளுகையின் அடிப்படையையும் வல்லமைகளையும் ஆணித்தரமக்குகின்றன.
மையக் கருத்து
ஸ்தோத்திரம்.
பொருளடக்கம்
1 மேசியாவின் புத்தகம் — 1:1-41:13
2 விருப்பத்தின் புத்தகம். அதிகாரங்கள் — 42:1-72:20
3 இஸ்ரவேலின் புத்தகம். அதிகாரங்கள் — 73:1-89:52
4 தேவனுடைய ஆளுகையின் புத்தகம். அதிகாரங்கள் — 90:1-106:48
5 ஸ்தோத்திரத்தின் புத்தகம். அதிகாரங்கள் — 107:1-150:6
சங்கீதம் 1
1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும்,
பாவிகளுடைய வழியில் நிற்காமலும்,
பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2 யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
3 அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு,
தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து,
இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான்.
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
4 துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல்,
காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
5 ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும்,
பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
6 யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.