^
1 நாளாகமம்
ஆதாம் முதல் நோவா வரையுள்ள குடும்ப வரலாறு
யாப்பேத்தின் சந்ததியினர்
யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் சந்ததியினர்
காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள். கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள். கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான். மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும், பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான்.
கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும், எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும், ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும், அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான்.
சேமின் சந்ததியினர்
சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள். அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.
சேம், அர்பக்சாத், சாலா, ஏபேர், பேலேகு, ரெகூ, செரூகு, நாகோர், தேராகு, ஆபிராமாகிய ஆபிரகாம்.
ஆபிரகாமின் குடும்பம்
ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள். ஆகாரின் சந்ததியினர்
கேத்தூராளின் சந்ததியினர்
ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள். மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள். சாராளுடைய சந்ததியினர்
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள். ஏசாவின் மகன்கள்
ஏதோமிலுள்ள சேயீரின் மக்கள்
சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள். லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள். ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
ஏதோமை அரசாண்ட இராஜாக்கள்
இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா. பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத். ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.
ஏதோமின் பிரபுக்கள்
ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு, அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள். இஸ்ரவேலுடைய மகன்கள்
யூதாவின் மகன்கள்
யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று மகன்களும் சூவாவின் மகளான கானானிய பெண்ணிடம் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த மகன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனானதால் அவர் அவனைக் கொன்றுபோட்டார். யூதாவின் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் மகன்கள் எல்லோரும் ஐந்துபேர். பாரேசின் மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். சேராவின் மகன்கள் எல்லோரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர். சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார் 2:7 யோசுவா 7 அதிகாரம் பார்க்க என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன். ஏத்தானின் மகன்கள் அசரியா முதலானவர்கள்.
எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
எஸ்ரோனின் மகனாகிய ராமிலிருந்து
ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும், நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும், ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.
அவர்களுடைய சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் மகன்கள், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர். அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலனாகிய ஏத்தேர் என்பவன்.
எஸ்ரோனின் மகனாகிய காலேப்
எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் 2:18 காலேபுடைய மகளாக இருக்கலாம் என்னப்பட்ட தன்னுடைய மனைவியாகிய அசுபாளாலே பெற்ற மகன்கள் ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள். அசுபாள் இறந்த பின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள். ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான். பின்பு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தினுடைய தகப்பனாகிய மாகீரினுடைய மகளைத் திருமணம்செய்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள். செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது.
கெசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள். காலேபினுடைய ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்தபின்பு, எஸ்ரோனின் மனைவியாகிய அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
எஸ்ரோனின் மகனாகிய யெர்மெயேல்
எஸ்ரோனுக்கு முதலில் பிறந்த யெர்மெயேலின் மகன்கள் ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே. அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய். யெர்மெயேலுக்கு முதலில் பிறந்த ராமின் மகன்கள் மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள். ஓனாமின் மகன்கள் சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் மகன்கள் நாதாப், அபிசூர் என்பவர்கள். அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள். நாதாபினுடைய மகன்கள் சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான். அப்பாயிமின் மகன் இஷி; இஷியின் மகன் சேசான்; சேசானின் மகள் அக்லாய். சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான். யோனத்தானின் மகன்கள், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் சந்ததி.
சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான். சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான். சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான். ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
அசரியா எலேசைப் பெற்றான்; ஏலேஸ் எலெயாசாவைப் பெற்றான். எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான். சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிஷாமாவைப் பெற்றான்.
காலேபின் சந்ததி
யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் மகன்கள் முதலில் பிறந்த சீப்பின் தகப்பனாகிய மேசாவும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் மகன்களுமே. எப்ரோனின் மகன்கள் கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள். செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான். சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன். காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான். யாதாயின் மகன்கள் ரேகேம், யோதாம், கேசான், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள். அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள்.
எப்ராத்தாளிடம் முதலில் பிறந்த ஊருடைய மகனாகிய காலேபினுடைய மகன்கள் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும், பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் மகன்கள், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள். கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், இத்ரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தாவோலியர்களும் பிறந்தார்கள்.
சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நெத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே. யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.
தாவீதின் மகன்கள்
இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆட்சிசெய்தான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் மகளாகிய பத்சேபாளிடம் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்களும்,
இப்பார், எலிஷாமா, எலிப்பெலேத், நோகா, நெப்பேக், யப்பியா, எலிஷாமா, எலியாதா, எலிப்பெலேத் என்னும் ஒன்பதுபேர்களுமே. மறுமனையாட்டிகளின் மகன்களையும் இவர்களுடைய சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லோரும் தாவீதின் மகன்கள்.
யூதாவின் இராஜா
சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத். இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ். இவனுடைய மகன் அமத்சியா; இவனுடைய மகன் அசரியா; இவனுடைய மகன் யோதாம். இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே. இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா.
யோசியாவின் மகன்கள், முதலில் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் மகனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் மகனும், சல்லூம் என்னும் நான்காம் மகனுமே. யோயாக்கீமின் மகன்கள் எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
சிறையிருப்புக்குப்பின் ராஜ வம்சம்
கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல், மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள். பெதாயாவின் மகன்கள் செருபாபேல், சீமேயி என்பவர்கள்; செருபாபேலின் மகன்கள் மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள். அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேர்களுமே. அனனியாவின் மகன்கள், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய மகன் ரெபாயா; இவனுடைய மகன் அர்னான்; இவனுடைய மகன் ஒபதியா; இவனுடைய மகன் செக்கனியா.
செக்கனியாவின் மகன்கள் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் மகன்கள் அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர். நெயாரியாவின் மகன்கள் எலியோனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூன்றுபேர். எலியோனாவின் ஏழு மகன்கள் ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்பவர்கள்.
யூதாவின் மற்றக் கோத்திரங்கள்
ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார்கள், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி; கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதலில் பிறந்த ஊரின் மகன்கள்.
தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு மனைவிகள் இருந்தார்கள். நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் மகன்கள் இவர்களே. ஏலாளின் மகன்கள், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள். கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் மகனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என்னுடைய எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடு இருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடி அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன். எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனிதர்கள்.
கேனாசின் மகன்கள் ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் மகன்களில் ஒருவன் ஆத்தாத். மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளர்களாக இருந்தார்கள். எப்புன்னேயின் மகனாகிய காலேபின் மகன்கள் ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் மகன்களில் ஒருவன் கேனாஸ். எகலெலேலின் மகன்கள் சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.
எஸ்றாவின் மகன்கள் யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் மனைவி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள். அவன் மனைவியாகிய எகுதியாள் கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் திருமணம் செய்த பார்வோனின் மகளாகிய பித்தியாளின் மகன்கள் இவர்களே.
நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய மனைவியின் மகன்கள் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தெமொவாவுமே. ஷீமோனின் மகன்கள் அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் மகன்கள் சோகேதும் பென்சோகேதுமே.
யூதாவின் மகனாகிய சேலாகின் மகன்கள்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேஷாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும், யோக்கீமும், கோசேபாவின் மனிதர்களும், மோவாபியர்களை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் ஆரம்பகாலத்தின் செய்திகள். இவர்கள் குயவர்களாக இருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிப்பதற்கு அங்கே குடியிருந்தார்கள்.
சிமியோனின் சந்ததிகள்
சிமியோனின் மகன்கள் நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள். இவனுடைய மகன் சல்லூம்; இவனுடைய மகன் மிப்சாம்; இவனுடைய மகன் மிஸ்மா. மிஸ்மாவின் மகன்களில் ஒருவன் அம்முவேல்; இவனுடைய மகன் சக்கூர்; இவனுடைய மகன் சீமேயி. சீமேயிக்குப் பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தார்கள்; அவனுடைய சகோதரர்களுக்கு அதிக பிள்ளைகள் இல்லை; அவர்கள் வம்சங்களெல்லாம் யூதாவின் மக்களைப்போலப் பெருகினதுமில்லை. அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆசார்சூவாவிலும்,
பில்லாவிலும், ஏத்சேமிலும், தோலாதிலும், பெத்துவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும், பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகும்வரை இவைகள் அவர்களுடைய பட்டணங்களாக இருந்தது.
அவர்களுடைய ஐந்து பட்டணங்கள் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்பவைகள். அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்வரையுள்ள அவர்களுடைய எல்லா குடியிருப்புக்களும், அவர்கள் தங்குமிடங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும், யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூவும், எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும், செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் மகனாகிய சீப்பியின் மகன் சீசாவும் என்று, பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் தங்களுடைய வம்சங்களில் பிரபுக்களாக இருந்தார்கள்; இவர்களுடைய பிதாக்களின் வீட்டார்கள் ஏராளமாகப் பரவியிருந்தார்கள்.
தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படி தேதோரின் எல்லையாகிய மலைப்பகுதியின் கிழக்குப்புறம்வரை போய், நல்ல செழிப்பான மேய்ச்சலும், அமைதியும், சுகமுமுள்ள விசாலமான தேசத்தைக் கண்டுபிடித்தார்கள்; ஆரம்பத்திலே காமின் சந்ததியார்கள் அங்கே குடியிருந்தார்கள். பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் மறைவிடங்களையும் அழித்து, இந்த நாளிலே இருக்கிறதுபோல, அவர்களை முற்றிலும் அழித்து, அங்கே தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியால், அவர்கள் அந்த இடத்திலே குடியேறினார்கள்.
சிமியோனின் கோத்திரத்தார்களாகிய இவர்களில் ஐந்நூறு மனிதர்களும், அவர்களுடைய தலைவர்களாகிய இஷியின் மகன்களான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய், அமலேக்கியர்களில் தப்பி மீதியாக இருந்தவர்களைத் தோற்கடித்து, இந்த நாள்வரை இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.
ரூபனின் சந்ததியினர்
யோவேலின் மகன்களில் ஒருவன் செமாயா; இவனுடைய மகன் கோக்; இவனுடைய மகன் சிமேயி. இவனுடைய மகன் மீகா; இவனுடைய மகன் ராயா; இவனுடைய மகன் பாகால். இவனுடைய மகன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.
தங்களுடைய சந்ததிகளின்படியே தங்களுடைய வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவனுடைய சகோதரர்களில் தலைவர்கள் ஏயேலும், சகரியாவும், யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் மகன் பேலாவும்; இவனுடைய சந்ததியார் ஆரோவேரிலும், நேபோவரை, பாகால்மெயோன்வரை தங்கியிருந்தார்கள். கிழக்கே ஐப்பிராத்து நதி துவங்கி வனாந்திரத்தின் எல்லைவரை அவர்கள் தங்கியிருந்தார்கள்; அவர்களுடைய ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியானது.
சவுலின் நாட்களில் ஆகாரியர்களோடு அவர்கள் யுத்தம்செய்து, தங்களுடைய கையால் அவர்கள் விழுந்தபின்பு, அவர்களுடைய கூடாரங்களிலே கீலேயாத்தின் கிழக்கில் குடியேறினார்கள்.
காத்தின் சந்ததியினர்
காத்தின் கோத்திரம் அவர்களுக்கு எதிரே பாசான் தேசத்திலே சல்காயிவரை தங்கியிருந்தார்கள். அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதாகவும் இருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள். அவர்களுடைய தகப்பன் வழி உறவினர்களாகிய சகோதரர்கள், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழு பேர். இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் மகன்கள்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்திற்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் மகன்களாக இருந்தவர்கள். கூனியின் மகனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவனாக இருந்தான்.
அவர்கள் கீலேயாத்திலே இருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாக் குடியிருப்புக்களிலும் அவைகளின் எல்லைவரை தங்கியிருந்தார்கள். இவர்களெல்லோரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்களுடைய வம்சத்து அட்டவணைப்படி வரிசைப்படுத்தப்பட்டார்கள்.
ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில் எய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க வீரர்கள் நாற்பத்துநான்காயிரத்து எழுநூற்று அறுபதுபேராக இருந்தார்கள். அவர்கள் ஆகாரியர்களோடும், யெத்தூர் நாபீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்செய்கிறபோது, அவர்களை எதிர்க்கத் தேவனுடைய உதவி பெற்றபடியால், ஆகாரியர்களும் இவர்களோடு இருக்கிற யாவரும் தோற்கடிக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியால் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளினார். அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனிதர்களில் லட்சம்பேரையும் பிடித்தார்கள். யுத்தம் தேவனால் நடந்ததால் அவர்களுடைய எதிரிகளில் அநேகரை வெட்டி வீழ்த்தினார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகும்வரை இவர்களுடைய இடத்திலே குடியிருந்தார்கள்.
மனாசேயின் பாதிக்கோத்திரம்
மனாசேயின் பாதிக்கோத்திரம் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான் தொடங்கிப் பாகால் எர்மோன் வரை, சேனீர்வரை, எர்மோன் பர்வதம்வரை பெருகியிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவர்களாகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரர்களான மனிதர்களும் பெயர்பெற்ற தலைவர்களுமாக இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய பிதாக்களின் தேவனுக்கு துரோகம்செய்து, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச மக்களின் தேவர்களைப் பின்பற்றி கெட்டுப்போனார்கள். ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பியதால், அவன் ரூபனியர்களும் காத்தியர்களும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களுமாகிய அவர்களை சிறைபிடித்து, இந்த நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.
லேவியின் சந்ததி
எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான். அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான். ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.
மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான். அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான். அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.
யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணியைச் செய்தவன் இவன்தான். அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான். அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான்.
சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான். அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான். யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா மக்களையும் எருசலேமியர்களையும் சிறைபிடித்துக் கொண்டுபோகச்செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.
லேவியின் மகன்கள் கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே. கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள். கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள். மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள். லேவியர்களுக்கு அவர்களுடைய பிதாக்களின் வழியாக உண்டான வம்சங்கள்: கெர்சோமின் மகன் லிப்னி; இவனுடைய மகன் யாகாத்; இவனுடைய மகன் சிம்மா. இவனுடைய மகன் யோவா; இவனுடைய மகன் இத்தோ; இவனுடைய மகன் சேரா; இவனுடைய மகன் யாத்திராயி.
கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர். இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் அபியாசாப்; இவனுடைய மகன் ஆசீர். இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் ஊரியேல்; இவனுடைய மகன் ஊசியா; இவனுடைய மகன் சவுல்.
எல்க்கானாவின் மகன்கள் அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள். எல்க்கானாவின் மகன்களில் ஒருவன் சோபாய்; இவனுடைய மகன் நாகாத். இவனுடைய மகன் எலியாப்; இவனுடைய மகன் எரோகாம்; இவனுடைய மகன் எல்க்கானா.
சாமுவேலின் மகன்கள் அவனுக்கு முதலில் பிறந்த யோவேல், பிறகு அபியா 6:28 வஷ்னீ என்பவர்கள். மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி; இவனுடைய மகன் லிப்னி; இவனுடைய மகன் சிமேயி; இவனுடைய மகன் ஊசா. இவனுடைய மகன் சிமெயா; இவனுடைய மகன் அகியா; இவனுடைய மகன் அசாயா.
ஆலயத்தின் இசைக் கலைஞர்கள்
யெகோவாவுடைய பெட்டி தங்கினபோது, தாவீது யெகோவாவுடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துவற்கு ஏற்படுத்தியவர்களும், சாலொமோன் எருசலேமிலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டி முடியும்வரை ஆசரிப்புக்கூடாரம் இருந்த இடத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனிதர்களும் அவர்களுடைய மகன்களாவர் கோகாத்தியர்களின் மகன்களில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் மகன்; இவன் சாமுவேலின் மகன். இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யெரொகாமின் மகன்; இவன் ஏலியேலின் மகன்; இவன் தோவாகின் மகன். இவன் சூப்பின் மகன்; இவன் எல்க்கானாவின் மகன்; இவன் மாகாத்தின் மகன்; இவன் அமாசாயின் மகன்.
இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யோவேலின் மகன்; இவன் அசரியாவின் மகன்; இவன் செப்பனியாவின் மகன். இவன் தாகாதின் மகன்; இவன் ஆசீரின் மகன்; இவன் எபியாசாப்பின் மகன்; இவன் கோராகின் மகன். இவன் இத்சேயாரின் மகன்; இவன் கோகாத்தின் மகன்; இவன் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் மகன்.
இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் மகன்; இவன் சிமேயாவின் மகன். இவன் மிகாவேலின் மகன்; இவன் பாசெயாவின் மகன்; இவன் மல்கியாவின் மகன். இவன் எத்னியின் மகன்; இவன் சேராவின் மகன்; இவன் அதாயாவின் மகன். இவன் ஏத்தானின் மகன்; இவன் சிம்மாவின் மகன்; இவன் சீமேயின் மகன். இவன் யாகாதின் மகன்; இவன் கெர்சோமின் மகன்; இவன் லேவியின் மகன்.
மெராரியின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏத்தான் என்பவன் கிஷியின் மகன்; இவன் அப்தியின் மகன்; இவன் மல்லூகின் மகன். இவன் அஸபியாவின் மகன்; இவன் அமத்சியாவின் மகன்; இவன் இல்க்கியாவின் மகன். இவன் அம்சியின் மகன்; இவன் பானியின் மகன்; இவன் சாமேரின் மகன். இவன் மகேலியின் மகன்; இவன் மூசியின் மகன்; இவன் மெராரியின் மகன்; இவன் லேவியின் மகன்.
அவர்களுடைய சகோதரர்களாகிய மற்ற லேவியர்கள் தேவனுடைய ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
ஆரோனும் அவனுடைய மகன்களும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டு தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்கவும் வைக்கப்பட்டிருந்தார்கள். ஆரோனின் மகன்களில் எலெயாசார் என்பவனுடைய மகன் பினேகாஸ்; இவனுடைய மகன் அபிசுவா. இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா. இவனுடைய மகன் மெராயோத்; இவனுடைய மகன் அமரியா; இவனுடைய மகன் அகிதூப். இவனுடைய மகன் சாதோக்; இவனுடைய மகன் அகிமாஸ்.
அவர்களுடைய குடியிருப்புக்களின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் தங்கும் இடங்களாவன: கோகாத்தியர்களின் வம்சமான ஆரோனின் சந்ததிக்கு விழுந்த சீட்டின்படியே, யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள். அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள். இப்படியே ஆரோனின் சந்ததிக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும் லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தெமோவையும் அவற்றின் வெளிநிலங்களையும், ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும், பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
கோகாத்தின் மற்ற வம்சத்தினருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது. கெர்சோமின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.
மெராரியின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரெண்டு பட்டணங்கள் இருந்தது. அப்படியே இஸ்ரவேல் மக்கள் லேவியர்களுக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால், சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும், பெயர் வரிசையில் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது. எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும், யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும், ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
கெர்சோம் சந்ததிகளுக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானில் இருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும், இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபராத்தும் அதின் வெளிநிலங்களும், ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,
ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும், உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும், நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவில் இருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
மெராரியின் மற்ற சந்ததிகளுக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும், எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அடுத்து யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்திரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும், கெதெமோத்தும் அதின் வெளிநிலங்களும், மெபாகாத்தும் அதின் வெளிநிலங்களும்,
காத் கோத்திரத்திலே கீலேயாத்திலே உள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மகனாயீமும் அதின் வெளிநிலங்களும், எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
இசக்காரின் சந்ததி
அவர்கள் முன்னோர்களின் வம்சத்தார்களான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனிதர்களான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடு இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள். இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்கு சகோதரர்களான பெலசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம் பேர்களாக இருந்தார்கள்.
பென்யமீன் சந்ததி
பென்யமீன் மகன்கள் பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர். பேலாவின் மகன்கள் எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெலசாலிகளான ஐந்து தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களுடைய வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்திரெண்டாயிரத்து முப்பத்துநான்குபேர். பெகேரின் மகன்கள் செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள். தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவர்களாகிய அவர்களுடைய சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பெலசாலிகள் இருபதாயிரத்து இருநூறுபேர். யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான்; பில்கானின் மகன்கள் ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
யெதியாயேலின் மகன்களாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தார்களில் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களான பெலசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர். சுப்பீமும், உப்பீமும் ஈரின் மகன்கள் ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.
நப்தலியின் சந்ததி
நப்தலியின் மகன்களான பில்காளின் பேரன்மார்கள், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள். மனாசேயின் சந்ததி
மனாசேயின் மகன்களில் ஒருவன் அஸ்ரியேல்; அவனுடைய மறுமனையாட்டியாகிய அராமிய பெண்ணிடம் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான். மாகீர் மாகாள் என்னும் பெயருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியைத் திருமணம் செய்தான்; மனாசேயின் இரண்டாம் மகன் செலோப்பியாத்; செலொப்பியாத்திற்கு மகள்கள் இருந்தார்கள். மாகீரின் மனைவியாகிய மாக்காள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள்; இவனுடைய சகோதரனின் பெயர் சேரேஸ்; இவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம் என்பவர்கள். ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள். இவனுடைய சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள். செமீதாவின் மகன்கள் அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
எப்பிராயீமின் சந்ததி
எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய மகன் பேரேத்; இவனுடைய மகன் தாகாத்; இவனுடைய மகன் எலாதா; இவனுடைய மகன் தாகாத். இவனுடைய மகன் சாபாத்; இவனுடைய மகன்கள் சுத்தெலாக், ஏசேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூரார்களுடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனதால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள். அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேக நாட்கள் துக்கங்கொண்டாடும்போது, அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள். பின்பு அவன் தன்னுடைய மனைவியிடம் இணைந்ததால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு மகனைப் பெற்றாள்; அவன், தன்னுடைய குடும்பத்திற்குத் தீங்கு உண்டானதால், இவனுக்கு பெரீயா என்று பெயரிட்டான். இவனுடைய மகளாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தொரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான். இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா. இவனுடைய மகன் நூன்; இவனுடைய மகன் யோசுவா.
அவர்களுடைய சொந்த நிலங்களும், தங்குமிடங்களும், கிழக்கே இருக்கிற நாரானும், மேற்கே இருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாவரையுள்ள அதின் கிராமங்களும், மனாசே கோத்திரத்தின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இந்த இடங்களில் இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் சந்ததியர்கள் குடியிருந்தார்கள்.
ஆசேரின் சந்ததி
ஆசேரின் மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராள். பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன். ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஓதாமையும், இவர்களுடைய சகோதரியாகிய சூகாளையும் பெற்றான். யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள். சோமேரின் மகன்கள் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள். அவனுடைய சகோதரனாகிய ஏலேமின் மகன்கள் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
சோபாக்கின் மகன்கள் சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா, பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள். யெத்தேரின் மகன்கள் எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
உல்லாவின் மகன்கள் ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள். ஆசேரின் சந்ததிகளாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தலைவர்களும் தெரிந்துகொள்ளப்பட்ட பெலசாலிகளும், பிரபுக்களின் தலைவர்களுமாக இருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர்.
பென்யமீனியனாகிய சவுலின் வம்ச வரலாறு
கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே. கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர, தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும், எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள். ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன். பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
அகியோ, சாஷாக், எரேமோத், செபதியா, ஆராத், ஆதேர், மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள். செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர், இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
யாக்கிம், சிக்ரி, சப்தி, எலியேனாய், சில்தாய், ஏலியேல், அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
இஸ்பான், ஏபேர், ஏலியேல், அப்தோன், சிக்ரி, ஆனான், அனனியா, ஏலாம், அந்தோதியா, இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
சம்சேராய், செகரியா, அத்தாலியா, யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள். இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள். அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப், கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள். நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான். யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள். அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே. ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
எருசலேமில் உள்ள மக்கள்
யூதாவின் மகனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் மகனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் மகன் ஊத்தாய். சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவனுடைய பிள்ளைகளும், சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவனுடைய சகோதரர்களாகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேர்களுமே.
பென்யமீன் சந்ததியில் அசெனூவாவின் மகனாகிய ஒதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு. எரோகாமின் மகன் இப்னெயா; மிக்கிரியின் மகனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்; தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரர்களாகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனிதர்கள் எல்லோரும், தங்களுடைய பிதாக்களின் வம்சத்திலே முன்னோர்களின் தலைவர்களாக இருந்தார்கள்.
ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின். அகிதூபின் மகனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் மகனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்காரன். மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மேரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும், அவர்களுடைய சகோதரர்களும், தங்கள் முன்னோர்களின் வம்சத்தலைவர்களான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்தின் பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
லேவியர்களில் மெராரியின் சந்ததியான அசபியாவின் மகனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா, பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் மகனாகிய சிக்ரிக்குப் பிறந்த மீகாவின் மகன் மத்தனியா, எதுத்தூனின் மகனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியர்களின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் மகனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான் என்பவர்களும், இவர்கள் சகோதரர்களுமே; இவர்கள் தலைவன் சல்லூம். லேவி சந்ததியின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்துவந்தார்கள். கோராகின் மகனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களாகிய அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் யெகோவாவுடைய இடத்திலே கூடாரத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, கூடாரத்துவாசல்களைக் காத்துவந்தார்கள்.
எலெயாசாரின் மகனாகிய பினேகாசுடனே யெகோவா இருந்ததால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாக இருந்தான். மெசெல்மியாவின் மகனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாக இருந்தான்.
வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரெண்டுபேர்களாக இருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்களுடைய வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், தரிசனம்காண்கிறவனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்களுடைய வேலைகளில் வைத்தார்கள். அப்படியே அவர்களும், அவர்களுடைய மகன்களும் யெகோவாவுடைய ஆலயமாகிய கூடாரத்து வாசல்களைக் காக்கிறவர்களை வரிசையாக விசாரித்து வந்தார்கள். ஆலயத்தின் வாசல்களைக் காக்கிறவர்கள் நான்கு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.
அவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து, ஏழுநாட்களுக்கு ஒருமுறை மாறிமாறி அவர்களோடு இருக்க வருவார்கள். தேவாலயத்தின் அறைகள்மேலும் கருவூல அறைகள்மேலும் உள்ள விசாரிக்கும் வேலை லேவியர்களான அந்த நான்கு தலைமைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள். அவர்களில் சிலர் மற்றப் பொருட்களின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மாவு, திராட்சைரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்களின்மேலும் விசாரணைக்காரர்களாக இருந்தார்கள்.
ஆசாரியர்களின் மகன்களில் சிலர் நறுமணப் பொருட்களால் பரிமளதைலம் இறக்குவார்கள். லேவியர்களில் கோராகியனான சல்லூமின் மூத்த மகனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் சகோதரர்களாகிய கோகாத்தியர்களின் மகன்களில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
இவர்களில் லேவியர்களுடைய குடும்பத்தலைவர்களாகிய சங்கீதக்காரர்கள் இரவும் பகலும் தங்களுடைய வேலையை நடத்தவேண்டியதிருந்ததால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்களுடைய அறைகளில் இருந்தார்கள். லேவியர்களில் குடும்பத்தலைவர்களாகிய இவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
சவுலின் வம்ச வரலாறு
கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவனுடைய மனைவியின் பெயர் மாக்காள். அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே. மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலிருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்கு சமீபத்தில் குடியிருந்தார்கள். நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான். யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பாயா; இவனுடைய மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல். ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் மகன்கள்.
சவுலின் மரணம்
தன்னுடைய ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன்னுடைய பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதால் அப்படி செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை ஊன்றி அதின்மேல் விழுந்தான்.
சவுல் செத்துப்போனதை அவனுடைய ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான். அப்படியே சவுலும், அவனுடைய மூன்று மகன்களும், அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இறந்துபோனார்கள்.
மக்கள் பயந்தோடியதையும், சவுலும் அவனுடைய மகன்களும் இறந்துபோனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது தங்களுடைய பட்டணங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து, அவைகளில் குடியிருந்தார்கள்.
அவனுடைய ஆடைகளையும், அவனுடைய தலையையும், அவனுடைய ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்களுடைய விக்கிரகங்களுக்கும் மக்களுக்கும் அதை அறிவிக்கும்படி பெலிஸ்தர்களுடைய தேசத்தைச்சுற்றிலும் செய்தி அனுப்பி, அவனுடைய ஆயுதங்களைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே வைத்து, அவனுடைய தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள்.
பெலிஸ்தர்கள் சவுலுக்கு செய்த எல்லாவற்றையும் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் எல்லோரும் கேட்டபோது, பெலசாலிகள் எல்லோரும் எழுந்துபோய், சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்களுடைய எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்செய்து, ஏழுநாட்கள் உபவாசம் இருந்தார்கள்.
அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான். அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்ஜியபாரத்தை ஈசாயின் மகனாகிய தாவீதிடம் ஒப்படைத்தார்.
தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவாகுதல்
தாவீது எருசலேமைக் கைப்பற்றுதல்
பின்பு தாவீது இஸ்ரவேல் எல்லோரோடும் ஏபூசாகிய எருசலேமிற்குப் போனான்; எபூசியர்கள் அந்த தேசத்தின் குடிகளாக இருந்தார்கள். அப்பொழுது ஏபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழைவதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது. எபூசியர்களை முறியடிப்பதில் எவன் முந்தினவனாக இருக்கிறானோ, அவன் தலைவனும் தளபதியுமாக இருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் மகனாகிய யோவாப் முந்தி அவர்களை முறியடித்து தலைவனாக்கப்பட்டான். தாவீது அந்தக் கோட்டையில் தங்கியிருந்ததால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது. பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான். தாவீதின் பெயரும் புகழும் நாளுக்குநாள் வளர்ந்துவந்தது; ஏனென்றால், சேனைகளுடைய யெகோவா அவனோடு இருந்தார்.
தாவீதின் பலசாலிகள்
யெகோவா இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்க அவனோடு இருந்து ராஜ்ஜியபாரம்செய்கிற அவனிடமும், எல்லா இஸ்ரவேலர்களிடமும், வீரர்களாக இருந்த முதன்மையான பெலசாலிகளும், தாவீதுக்கு இருந்த அந்த பலசாலிகளின் எண்ணிக்கையாவது: அக்மோனியின் மகனாகிய யாஷோபியாம் என்னும் முப்பது பேர்களின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன்னுடைய ஈட்டியை ஓங்கி அவர்களை ஒன்றாகக் கொன்றுபோட்டான். இவனுக்கு இரண்டாவது அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பெலசாலிகளில் ஒருவன். பெலிஸ்தர்கள் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோதும், மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடு அங்கே இருந்தான். அப்பொழுது அவர்கள் இந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தர்களை வெட்டிப்போட்டார்கள்; அதினாலே யெகோவா பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.
முப்பது தலைவர்களில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் குகையில் இருக்கிற தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் முகாம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது, தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் படை பெத்லெகேமில் இருந்தது. தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆசைகொண்டு, என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
அப்பொழுது அந்த மூன்றுபேர்களும் பெலிஸ்தர்களின் முகாமிற்குள் துணிவுடன் நுழைந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனமில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: நான் இதைச் செய்யாதபடி, என்னுடைய தேவன் என்னைக் காத்துக்கொள்வாராக; தங்களுடைய உயிரைப்பற்றி நினைக்காமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனிதர்களின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.
யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேர்களில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை கொன்றதால் இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான். இந்த மூன்றுபேர்களில் அவன் மற்ற இரண்டுபேர்களிலும் மேன்மையுள்ளவனானதால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கு அவன் சமமானவன் இல்லை.
பெலசாலியாகிய யோய்தாவின் மகனும், கப்சேயேல் ஊரைச்சேர்ந்தவனுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமட்டுமல்லாமல், உறைந்த மழைபெய்த நாளில் அவன் ஒரு குகைக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான். ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியனுடைய கையில் நெய்கிறவர்களின் படைமரத்திற்கு இணையான ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவனுடைய ஈட்டியால் அவனைக் கொன்றுபோட்டான்.
இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்ததால், மூன்று பெலசாலிகளுக்குள்ளே பெயர்பெற்றவனாக இருந்தான். முப்பதுபேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கும் இவன் சமமானவன் இல்லை; அவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
இராணுவத்திலிருந்த மற்ற பெலசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான், ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ், தெக்கோவியனாகிய இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய சிப்பெக்காய், அகோகியனாகிய ஈலாய், நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் மகன் ஏலேத், பென்யமீன் சந்ததியில் கிபேயா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல், பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய ஏலியாபா,
கீசோனியனாகிய ஆசேமின் மகன்கள், ஆராரியனாகிய சாகியின் மகன் யோனத்தான். ஆராரியனாகிய சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் ஏலிபால், மெகராத்தியனாகிய எப்பேர், பெலோனியனாகிய அகியா, கர்மேலியனாகிய ஏஸ்ரோ, ஏஸ்பாயின் மகன் நாராயி,
நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் மகன் மிப்கார், அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராய், இத்ரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரேப், ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத்,
ரூபனியர்களின் தலைவனாகிய சீசாவின் மகன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடு முப்பது பேர் இருந்தார்கள். மாகாவின் மகன் ஆனான், மிதினியனாகிய யோசபாத், அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓதாமின் மகன்கள் சமாவும், யேகியேலும்,
சிம்ரியின் மகன் யெதியாயேல், தித்சியனாகிய அவனுடைய சகோதரன் யோகா, மாகாவியர்களான ஏலியேல், ஏல்நாமின் மகன்கள் ஏரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும், மெசோபாயா ஊரைச்சேர்ந்தவர்களாகிய ஏலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.
தாவீதோடு சேர்ந்த வீரர்கள்
கிபேயா ஊரைச்சேர்ந்த சேமாவின் மகன்கள் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் மகன்களாகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும், முப்பதுபேர்களில் பலசாலியும் முப்பதுபேர்களுக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரைச்சேர்ந்த யோசபாத்,
எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா, எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோராகியர்களும், யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரைச்சேர்ந்த எரோகாமின் மகன்களுமே.
காத்தியர்களில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளில் இருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமும் உள்ளவர்களாக இருந்து, யுத்தவீரர்களான பலசாலிகள் சிலரும் வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதுக்கு ஆதரவாக சேர்ந்தார்கள்.
யாரென்றால், ஏசேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப், நான்காவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா, ஆறாவது அத்தாயி, ஏழாவது ஏலியேல், எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத், பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி,
காத் மகன்களான இவர்கள் இராணுவத்தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேர்களுக்கும் பெரியவன் ஆயிரம்பேர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள். யோர்தான் கரைபுரண்டு போயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற அனைவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
பின்னும் பென்யமீன் மனிதர்களிலும் யூதா மனிதர்களிலும் சிலர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதிடம் வந்தார்கள். தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களை சந்தித்து: நீங்கள் எனக்கு உதவி செய்ய சமாதானமாக என்னிடம் வந்தீர்களானால், என்னுடைய இருதயம் உங்களோடு இணைந்திருக்கும்; என்னுடைய கைகளில் கொடுமை இல்லாமலிருக்க, என்னை என்னுடைய எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களென்றால், நம்முடைய முற்பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கியதால், அவன்: “தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் மகனே, உமக்கு ஆதரவாக இருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார்” என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை படைகளுக்குத் தலைவர்களாக்கினான்.
சவுலின்மேல் யுத்தம்செய்யப்போகிற பெலிஸ்தர்களுடனே தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவனுக்கு ஆதரவாகச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தர்களின் பிரபுக்கள் யோசனைசெய்து, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாகத் தன்னுடைய ஆண்டவனாகிய சவுலிற்கு ஆதரவாகப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவில்லை. அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகும்போது, மனாசேயில் அதனாக், யோசபாத், யெதியாயேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தார்களின் ஆயிரம்பேர்களுக்கு தலைவர்கள் அவனுக்கு ஆதரவாக வந்தார்கள். அந்த படைகளுக்கு விரோதமாக இவர்கள் தாவீதுக்கு உதவி செய்தார்கள்; இவர்களெல்லோரும் பலசாலிகளும் இராணுவத்தில் தலைவர்களுமாக இருந்தார்கள். அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனிதர்கள் அவனிடம் வந்து சேர்ந்ததால், அவர்கள் தேவசேனையைப்போல பெரிய சேனையானார்கள்.
எப்ரோனில் தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்
யெகோவாவுடைய வார்த்தையின்படியே, சவுலின் ராஜ்ஜியபாரத்தைத் தாவீதிடம் திருப்ப, எப்ரோனில் இருக்கிற அவனிடம் வந்த போர்வீரர்களான தலைவர்களின் எண்ணிக்கை: யூதா கோத்திரத்தில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, யுத்த போர்வீரர்களானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர். சிமியோன் கோத்திரத்தில் பலசாலிகளாகிய யுத்தவீரர்கள் ஏழாயிரத்து நூறுபேர். லேவி கோத்திரத்தில் நான்காயிரத்து அறுநூறுபேர். ஆரோன் சந்ததியார்களின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடு இருந்த மூவாயிரத்து எழுநூறுபேர்களும், பலசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களான இருபத்திரண்டு தலைவர்களுமே.
பென்யமீன் கோத்திரத்தார்களான சவுலின் சகோதரர்களில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள். எப்பிராயீம் கோத்திரத்தில் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெயர் பெற்ற மனிதர்களான பலசாலிகள் இருபதாயிரத்து எண்ணூறுபேர். மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்க வரும்படி, பெயர்பெயராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெட்டாயிரம்பேர்.
இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே. செபுலோன் கோத்திரத்தில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்வதற்கும், தங்களுடைய அணியைக் காத்து நிற்பதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதாயிரம்பேர்.
நப்தலி கோத்திரத்தில் ஆயிரம் தலைவர்கள் கேடகமும் ஈட்டியும் பிடித்த அவர்களோடு இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர். தாண் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எட்டாயிரத்து அறுநூறுபேர்.
ஆசேர் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்களாக போர்செய்யப்போகத்தக்கவர்கள் நாற்பதாயிரம்பேர். யோர்தானுக்கு அக்கரையான ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும், யுத்தம்செய்ய எல்லாவித ஆயுதங்களையும் அணிந்தவர்கள் நூற்றிருபதாயிரம்பேர்.
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்க, இந்த யுத்தமனிதர்கள் எல்லோரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இதயத்தோடு எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற அனைவரும் தாவீதை ராஜாவாக்க ஒருமனப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே தாவீதோடு மூன்று நாட்கள் இருந்து, சாப்பிட்டுக் குடித்தார்கள்; அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம்செய்திருந்தார்கள். இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைவரை அவர்களுக்கு அருகில் இருந்தவர்களும், கழுதைகள்மேலும், ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும், மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், உலர்ந்த திராட்சைப்பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளைத் தேவையான அளவு ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டானது.
உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்பக் கொண்டுவருதல்
அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவங்கி ஆமாத்தின் எல்லைவரையுள்ள இஸ்ரவேலையெல்லாம் சேர்த்து, கேருபீன்களின் நடுவே வாசம்செய்கிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்த இடத்திற்குப் போனார்கள்.
அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை வழிநடத்தினார்கள். தாவீதும் எல்லா இஸ்ரவேலர்களும் தங்களுடைய முழு பெலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் இசைத்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடினார்கள்.
அவர்கள் கீதோனின் களம்வரை வந்தபோது, மாடுகள் தடுமாறியதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன்னுடைய கையை நீட்டினான். அப்பொழுது யெகோவா ஊசாவின்மேல் கோபம்மூண்டவராக, அவன் தன்னுடைய கையைப் பெட்டியின் அருகில் நீட்டியதால் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான். அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததால் தாவீது கவலைப்பட்டு, அந்த இடத்திற்கு இந்த நாள்வரை சொல்லப்பட்டவருகிற பேரேஸ் ஊசா என்னும் பெயரிட்டு,
அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடம் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி, பெட்டியைத் தன்னிடம் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் சேர்த்தான். தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடம் மூன்று மாதங்கள் இருக்கும்போது, யெகோவா ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
தாவீதின் வீடும் குடும்பமும்
எருசலேமிலே தாவீது பின்னும் அநேக பெண்களைத் திருமணம்செய்து, பின்னும் மகன்களையும் மகள்களையும் பெற்றான். எருசலேமிலே அவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், இப்பார், எலிசூவா, எல்பெலேத், நோகா, நெப்பேக், யப்பியா, எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள். தாவீது பெலிஸ்தர்களைத் தோற்கடித்தல்
தாவீது அனைத்து இஸ்ரவேலர்களின்மேலும் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டதைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்கள் எல்லோரும் தாவீதைத் தேட வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டான். பெலிஸ்தர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். பெலிஸ்தர்களுக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, யெகோவா: போ, அவர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களைத் தோற்கடித்து: தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல, தேவன் என்னுடைய கையால் என்னுடைய எதிரிகளை உடைந்து ஓடச்செய்தார் என்றான்; அதினால் அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்னும் பெயரிட்டார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன.
பெலிஸ்தர்கள் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடம் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார். தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் கேசேர்வரைத் தோற்கடித்தார்கள். அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் யெகோவா எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார்.
உடன்படிக்கைப் பெட்டி எருசலேமிற்கு கொண்டுவரப்படுதல்
ஆரோனின் சந்ததிகளையும், லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேரையும், மெராரியின் சந்ததியில் பிரபுவாகிய அசாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூற்றிருபதுபேரையும்,
கெர்சோன் மகன்களில் பிரபுவாகிய யோவேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுமுப்பதுபேரையும், எலிசாபான் மகன்களில் பிரபுவாகிய செமாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூறுபேரையும், எப்ரோன் சந்ததியில் பிரபுவாகிய ஏலியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய எண்பதுபேரையும், ஊசியேல் சந்ததியில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுப்பன்னிரெண்டு பேரையும் தாவீது கூடிவரச்செய்தான்.
பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, ஏலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து, அவர்களை நோக்கி: லேவியர்களில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர்கள், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்செய்த இடத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்களுடைய சகோதரர்களையும் பரிசுத்தம்செய்துகொள்ளுங்கள்.
முதலில் நீங்கள் அதை சுமக்காததாலும், நாம் நம்முடைய தேவனாகிய யெகோவாவை நியாயமானபடி தேடாமற்போனதாலும், அவர் நமக்குள்ளே அடிவிழச்செய்தார் என்றான். ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்செய்துகொண்டார்கள். பின்பு லேவியர்கள் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபடி தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினால் தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
தாவீது லேவியர்களின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய பாடகர்களைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான். அப்படியே லேவியர்கள் யோவேலின் மகனாகிய ஏமானையும், அவனுடைய சகோதரர்களில் பெரகியாவின் மகனாகிய ஆசாப்பையும், மெராரியின் சந்ததியான தங்களுடைய சகோதரர்களில் குஷாயாவின் மகனாகிய ஏத்தானையும், இவர்களோடு இரண்டாவது வரிசையாகத் தங்களுடைய சகோதரர்களாகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளர்களையும் நிறுத்தினார்கள்.
பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், வெண்கல தொனியுள்ள கைத்தாளங்களை ஒலிக்கச்செய்து பாடினார்கள். சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருக்களை வாசித்தார்கள். மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாக வாசித்தார்கள்.
லேவியர்களுக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாக இருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையை நடத்தினான். பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள். செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர்கள் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளிகளாக இருந்தார்கள்.
இப்படி தாவீதும், இஸ்ரவேலின் மூப்பர்களும், ஆயிரம்பேர்களின் தலைவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடு கொண்டுவரச்செய்தார்கள். யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களுக்கு தேவன் தயவு செய்ததால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.
தாவீதும், பெட்டியை சுமக்கிற எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர்களின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளை அணிந்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்திருந்தான். அப்படியே இஸ்ரவேலனைத்தும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் சத்தத்தோடும், தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரம்வரை வந்தபோது, சவுலின் மகளாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன்னுடைய இருதயத்தில் அவமதித்தாள்.
தாவீதின் நன்றிப்பாடல்
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கொண்டாடித் துதித்துப் புகழுவதற்குக் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பணிவிடை செய்யும்படி லேவியர்களில் சிலரை நியமித்தான். அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாக இருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களை தட்டவும், பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள். அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே யெகோவாவுக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது. யெகோவாவை துதித்து, அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்; அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைத் துதித்து, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள். அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் 16:12 ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள். அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்குக் கொடுத்த ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள். அதை யாக்கோபுக்குக் கட்டளையாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள். அவர்கள் ஒரு மக்களைவிட்டு மற்றொரு மக்களிடத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மற்றொரு தேசத்தார்களிடமும் போனார்கள். அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார். பூமியின் எல்லா குடிமக்களே, யெகோவாவைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவியுங்கள். தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தேவர்களைவிட பயப்படத்தக்கவர் அவரே. அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; யெகோவாவோ வானங்களை உண்டாக்கினவர். மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவருடைய ஸ்தலத்தில் இருக்கிறது. மக்களின் வம்சங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதை செலுத்துங்கள். யெகோவாவுக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் நுழையுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர். வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; யெகோவா ஆளுகைசெய்கிறார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லப்படுவதாக. கடலும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக. அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக் காட்டுமரங்களும் முழக்கமிடும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது. எங்கள் இரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து, எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக;” அதற்கு மக்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லிக் யெகோவாவை துதித்தார்கள்.” பின்பு பெட்டிக்கு முன்பாக என்றும் அன்றாட முறையாக பணிவிடை செய்யும்படி, அவன் அங்கே யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவனுடைய சகோதரர்களையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரர்களாகிய அறுபத்தெட்டுபேரையும் வைத்து, எதித்தூனின் மகனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான். கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகன பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனங்களை எப்பொழுதும், காலையிலும் மாலையிலும், யெகோவா இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் யெகோவாவுக்குச் செலுத்துவதற்காக, அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களையும் வைத்து, இவர்களோடு ஏமானையும், எதித்தூனையும், பெயர்பெயராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற சிலரையும்: யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,
பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் ஒலிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் மகன்களை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான். பின்பு மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.
தேவன் தாவீதிற்கு வாக்குத்தத்தம் செய்தல்
அன்று இரவிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்: நீ போய், என்னுடைய ஊழியக்காரனாகிய தாவீதை நோக்கி: யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாழும்படி நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம். நான் இஸ்ரவேலை வரச்செய்த நாள்முதல் இந்த நாள்வரை நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்திற்கும், ஒரு தங்குமிடத்திலிருந்து மற்றொரு தங்குமிடத்திற்கும் போனேன். நான் எல்லா இஸ்ரவேலோடும் உலாவி வந்த எந்த இடத்திலாவது, நான் என்னுடைய மக்களை மேய்க்கக் கற்பித்த இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் யாரையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாமலிருக்கிறது என்ன என்று ஏதேனும் ஒரு வார்த்தை சொன்னது உண்டோ?
இப்போதும், நீ என்னுடைய ஊழியக்காரனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து, நீ போன இடமெல்லாம் உன்னோடு இருந்து, உன்னுடைய எதிரிகளையெல்லாம் உனக்கு முன்பாக அழித்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயர்களுக்கு இணையான பெரிய பெயரை உனக்கு உண்டாக்கினேன்.
நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய இடத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலவும், நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலவும், துன்மார்க்கமான மக்களால் இனி சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நியமித்தேன். உன்னுடைய எதிரிகளையெல்லாம் கீழ்ப்படுத்தினேன். இப்போதும் யெகோவா உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்.
நீ உன்னுடைய பிதாக்களிடத்தில் போக, உன்னுடைய நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன்னுடைய மகன்களில் ஒருவனாகிய உன்னுடைய சந்ததியை எழும்பச்செய்து, அவனுடைய ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவேன். அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவனுடைய சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன்.
நான் அவனுக்குப் பிதாவாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்; உனக்கு முன்னிருந்தவனைவிட்டு என்னுடைய கிருபையை நான் விலகச்செய்ததுபோல, அவனைவிட்டு விலகச்செய்யாமல், அவனை என்னுடைய ஆலயத்திலும் என்னுடைய ராஜ்ஜியத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கச்செய்வேன்; அவனுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார். நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லா தரிசனத்தின்படியும் தாவீதுக்கு சொன்னான்.
தாவீதின் ஜெபம்
அப்பொழுது தாவீது ராஜா உள்ளே நுழைந்து, யெகோவாவுடைய சமூகத்திலிருந்து: தேவனாகிய யெகோவாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் யார்? என் குடும்பம் எப்படிப்பட்டது? தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்கு சிறியதாக இருக்கிறது என்று தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகு காலத்திற்கு முன்பு சொன்ன செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனிதனாகப் பார்த்தீர். உமது அடியானுக்கு உண்டாகும் மேன்மையைப்பற்றி, தாவீது அதன்பின்பு உம்மோடு சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர். யெகோவாவே, உமது அடியானுக்காக, உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியச்செய்யும்படி, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர். யெகோவாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறே தேவனும் இல்லை. உமது மக்களாகிய இஸ்ரவேலுக்கு நிகரான மக்களும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே தேசத்தை தேவனாகிய நீர் உமக்கு மக்களாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களால் உமக்கு புகழ்ச்சியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது மக்களுக்கு முன்பாக தேசங்களைத் துரத்தி,
உமது மக்களாகிய இஸ்ரவேலர்கள் என்றைக்கும் உமது மக்களாக இருப்பதற்கு அவர்களை நிலைப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்கு தேவனானீர். இப்போதும் யெகோவாவே, தேவரீர் அடியானையும் அவனுடைய வீட்டையும்குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைத்திருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும். ஆம், அது நிலைத்திருக்கவும், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா இஸ்ரவேலுக்கு தேவன் என்றும், உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக உறுதியானதென்றும் சொல்லப்படுவதால், உமது நாமம் என்றைக்கும் மகிமைப்படவுங்கடவது.
உனக்கு வீடு கட்டுவேன் என்று என்னுடைய தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்செய்ய, உமது அடியானுக்கு மனதைரியம் கிடைத்தது. இப்போதும் யெகோவாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர். இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி, அதை ஆசீர்வதித்தீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.
தாவீதின் வெற்றிகள்
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐப்பிராத் நதி அருகில் தன்னுடைய இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் அருகில் தோற்கடித்தான். அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும் இருபதாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டித்துப்போட்டான்.
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்கு பட்டணத்தார்களாகிய சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் இருபத்திரெண்டாயிரம்பேரை வெட்டிப்போட்டு, தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்கு பணிவிடைசெய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.
ஆதாரேசரின் வேலைக்காரர்களுக்கு இருந்த பொன்கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான். ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலத் தொட்டியையும் தூண்களையும் வெண்கலப் பொருட்களையும் உண்டாக்கினான்.
தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் தோற்கடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது, அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்செய்து, அவனைத் தோற்கடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தன்னுடைய மகனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான எல்லாவித பொருட்களையும், அவனிடத்திற்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம் செய்கிறவனாக இருந்தான். அந்த பொருட்களையும், தான் ஏதோமியர்கள், மோவாபியர்கள், அம்மோனிய மக்கள், பெலிஸ்தர்கள், அமலேக்கியர்கள் என்னும் எல்லா தேசங்களின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையுங்கூட தாவீது ராஜா யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.
செருயாவின் மகன் அபிசாயி உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெட்டாயிரம் ஏதோமியர்களைத் தோற்கடித்தான். ஆகையால் தாவீது ஏதோமிலே படைகளை வைத்தான்; ஏதோமியர்கள் எல்லோரும் அவனுக்குப் பணிவிடை செய்கிறவர்களானார்கள்; தாவீது போன இடங்களிலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.
தாவீதின் அலுவலர்கள்
தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய மக்களுக்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான். செருயாவின் மகன் யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; அகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான். அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அபிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; சவிஷா எழுத்தாளனாக இருந்தான். யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவனாக இருந்தான்; தாவீதின் மகன்கள் ராஜாவிடம் முன்னணி ஆலோசகர்களாக 18:17 ஆசாரியர்களாக இருந்தார்கள். அம்மோனியர்களுக்கு விரோதமாகப் போர் செய்தல்
அப்பொழுது ஆனூன்: தாவீதின் வேலைக்காரர்களைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை வைத்துவிட்டு, மற்றபாதியைக் கத்தரித்து, அவர்களை அனுப்பிவிட்டான். அந்த மனிதர்கள் வரும்போது, அவர்களுடைய செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனிதர்கள் மிகவும் வெட்கப்பட்டதால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்களுடைய தாடி வளரும்வரை நீங்கள் எரிகோவில் தங்கியிருந்து, பின்பு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.
அம்மோன் மக்கள் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோனியர்கள் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்காசோபா என்னும் சீரியர்களின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரை வீரர்களும் கூலிக்கு வரும்படி ஆயிரம் தாலந்து வெள்ளி அனுப்பி, முப்பத்திரெண்டாயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவனுடைய மக்களையும் கூலிப்படையாக அழைத்தனுப்பினான்; இவர்கள் வந்து, மெதெபாவுக்கு முன்புறத்திலே முகாமிட்டார்கள்; அம்மோனியர்கள் தங்களுடைய பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்செய்யவந்தார்கள்.
அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான். அம்மோனிய மக்கள் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலருகில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாக நின்றார்கள்.
யுத்த இராணுவங்களின் படை தனக்கு நேராக முன்னும் பின்னும் இருப்பதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதை சீரியர்களுக்கு எதிராக நிறுத்தி, மற்ற மக்களை அம்மோன் இராணுவத்திற்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்தி, தன்னுடைய சகோதரனாகிய அபிசாயிக்கு ஒப்புவித்து, அவனை நோக்கி:
என்னைவிட சீரியர்கள் பலங்கொண்டால் நீ எனக்குத் துணை நில்; உன்னைவிட அம்மோன் இராணுவத்தினர்கள் பலங்கொண்டால் நான் உனக்குத் துணை நிற்பேன். தைரியமாக இரு; நாம் நம்முடைய மக்களுக்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் நம்முடைய பெலத்தைக் காட்டுவோம்; யெகோவா தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
பின்பு யோவாபும் அவனோடிருந்த மக்களும் சீரியர்களோடு யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக தப்பியோடினார்கள். சீரியர்கள் தப்பியோடுவதை அம்மோன் இராணுவத்தினர்கள் கண்டபோது, அவர்களும் அவனுடைய சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக தப்பியோடிப் பட்டணத்திற்குள் நுழைந்தார்கள்; யோவாப் திரும்ப எருசலேமிற்கு வந்தான்.
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு மறுகரையில் சீரியர்களை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான். அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்கு அருகில் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினான்; தாவீது சீரியர்களுக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின்பு அவனோடு யுத்தம்செய்தார்கள்.
சீரியர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்; தாவீது சீரியர்களில் ஏழாயிரம் இரதங்களின் மனிதர்களையும், நாற்பதாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான். தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டதை ஆதாரேசருக்குப் பணிவிடை செய்கிற எல்லா ராஜாக்களும் கண்டபோது, அவர்கள் தாவீதோடு சமாதானம்செய்து, அவனுக்குப் பணிவிடை செய்தார்கள்; அதன்பின்பு அம்மோன் மக்களுக்கு உதவிசெய்ய சீரியர்கள் மனமில்லாதிருந்தார்கள்.
ரப்பாவைப் பிடித்தல்
தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து எடையுள்ள பொன்னும் இரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் கொண்டுபோனான். பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், கடப்பாரைகளும், கோடரிகளும் செய்கிற பணியில் பலவந்தமாக உட்படுத்தி; இப்படி அம்மோனிய மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா மக்களோடு எருசலேமிற்குத் திரும்பினான்.
பெலிஸ்தர்களோடு யுத்தம்
அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிப்பெக்காய் இராட்சத சந்ததியர்களில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் அடக்கப்பட்டார்கள். திரும்பப் பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் மகனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவனுடைய ஈட்டிக் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அளவு பெரிதாக இருந்தது. மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே உயரமான ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு ஆறு ஆறு விரலாக இருபத்துநான்கு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாக இருந்து, இஸ்ரவேலை சபித்தான்; தாவீதின் சகோதரனாகிய சிமேயாவின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான். காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய வீரர்களின் கையினாலும் இறந்தார்கள்.
தாவீது வீரர்களைக் கணக்கெடுத்தல்
யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலோங்கியதால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமிற்கு வந்து, போர் வீரர்களைக் கணக்கெடுத்து, எண்ணிக்கையை தாவீதிடம் கொடுத்தான்; இஸ்ரவேலெங்கும் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேர்களும், யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் நான்குலட்சத்து எழுபதாயிரம்பேர்களும் இருந்தார்கள்.
ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய கணக்கெடுப்பிற்குள் வராதபடி எண்ணாமற்போனான். இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியால் அவர் இஸ்ரவேலைத் தண்டித்தார். தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; பெரிய முட்டாள்தனமாக செய்தேன் என்றான்.
அப்பொழுது யெகோவா, தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி, நீ தாவீதிடம் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.
அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: மூன்று வருடத்துப் பஞ்சமோ? அல்லது உன்னுடைய எதிரியின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன்னுடைய எதிரிகளுக்கு முன்பாக ஓடிப்போகச் செய்யும் மூன்றுமாதத் துரத்துதலோ? அல்லது மூன்றுநாட்கள் யெகோவாவுடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் அழிவு உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் யெகோவாவுடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று யெகோவா சொல்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.
அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் யெகோவாவுடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான். ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரச்செய்தார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள். எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கும்போது யெகோவா பார்த்து, அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, அழிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; யெகோவாவுடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திற்கு அருகில் நின்றான்.
தாவீது தன்னுடைய கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற யெகோவாவுடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன்னுடைய கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் சாக்கைப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள். தாவீது தேவனை நோக்கி: மக்களை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவம் செய்தேன்; தீங்கு நடக்கச்செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தண்டிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய மக்களுக்கு விரோதமாக இராமல், எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டிற்கும் விரோதமாக இருப்பதாக என்றான்.
அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று யெகோவாவுடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான். அப்படியே தாவீது யெகோவாவின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படி போனான். ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நான்கு மகன்களும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளிந்துகொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான்.
தாவீது ஒர்னானிடம் வந்தபோது, ஒர்னான் கவனித்து தாவீதைப் பார்த்து, அவனுடைய களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைவரை குனிந்து தாவீதை வணங்கினான். அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி அதை எனக்குக் கொடு; வாதை மக்களைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதை உரிய விலைக்குக் கொடு என்றான்.
ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், உணவுபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான். அதற்கு தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாக வாங்கி, யெகோவாவுக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை உரிய விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் எடையுள்ள பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்திரவு கொடுத்ததுமல்லாமல், தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்.
எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே யெகோவா தனக்கு பதில் சொன்னதை தாவீது அந்த காலத்திலே கண்டு அங்கேயே பலியிட்டான். மோசே வனாந்திரத்தில் உண்டாக்கின யெகோவா தங்குமிடமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது. தாவீது யெகோவாவுடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கமுடியாமலிருந்தது. அப்பொழுது தாவீது: தேவனாகிய யெகோவாவுடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான். ஆலயத்திற்கான ஆயத்தம்
தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும், எண்ணமுடியாத அளவு கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியர்களும், தீரியர்களும் தாவீதுக்கு அதிகமான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். தாவீது: என்னுடைய மகனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாக இருக்கிறான்; யெகோவாவுக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் புகழும் மகிமையும் உடையதாக விளங்கும்படி மிகப்பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேமிக்க செய்யவேண்டும் என்று சொல்லி, தாவீது தன்னுடைய மரணத்திற்கு முன்னே அதிகமாக ஆயத்தம் செய்துவைத்தான்.
அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து, சாலொமோனை நோக்கி: என்னுடைய மகனே, நான் என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய இருதயத்தில் நினைத்திருந்தேன். ஆனாலும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ அதிகமான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைச் செய்தாய்; நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தச்செய்தாய்.
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற மகன் அமைதியுள்ள ஆண்மகனாக இருப்பான்; சுற்றி இருக்கும் அவனுடைய எதிரிகளையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவனுடைய பெயர் சாலொமோன் என்னப்படும்; அவனுடைய நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமைதியையும் கொடுப்பேன். அவன் என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்கு தகப்பனாக இருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
இப்போதும் என்னுடைய மகனே, நீ பாக்கியவானாக இருந்து, யெகோவா உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனே இருப்பாராக. யெகோவா உனக்கு ஞானத்தையும் உணர்வையும் கொடுத்து, உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக. யெகோவா இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த கட்டளைகளையும் சட்டங்களையும் செய்ய நீ கவனமாக இருந்தால் பாக்கியவானாக இருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாக இரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.
இதோ, நான் என்னுடைய சிறுமையிலே யெகோவாவுடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், எடைபோட முடியாத அதிகமான வெண்கலத்தையும் இரும்பையும் சேமித்தும், மரங்களையும் கற்களையும் சேமித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாக ஆயத்தம் செய்வாய்.
வேலை செய்யத்தக்க திரளான சிற்பிகளும், தச்சர்களும், கொத்தனார்களும், எந்த வேலையிலும் திறமைவாய்ந்தவர்களும் உன்னோடு இருக்கிறார்கள். பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்திற்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழுந்து காரியத்தை நடத்து; யெகோவா உன்னோடு இருப்பாராக என்றான்.
தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது: உங்கள் தேவனாகிய யெகோவா உங்களோடு இருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; யெகோவாவுக்கு முன்பாகவும், அவருடைய மக்களுக்கு முன்பாகவும், தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது. இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமாவையும், உங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவதற்கு நேராக்கி, யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிபொருட்களையும், யெகோவாவுடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படி, நீங்கள் எழுந்து, தேவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள் என்றான்.
லேவியர்கள்
அவர்களில் இருபத்துநான்காயிரம்பேர் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவர்களும் அலுவலர்களும் என்றும், நான்காயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும், துதி செய்வற்கு தான் செய்துவைத்த கீதவாத்தியங்களால் நான்காயிரம்பேர் யெகோவாவை துதிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி, அவர்களை லேவியின் மகன்களாகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய குழுக்களின்படி பிரித்தான்.
கெர்சோனியர்களில், லாதானும், சீமேயும் இருந்தார்கள். லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான். சீமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள்.
யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சீமேயின் மகன்களாக இருந்தார்கள். யாகாத் தலைவனாக இருந்தான்; சீனா இரண்டாம் மகனாக இருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் மகன்கள் இல்லாததால், அவர்கள் தகப்பன்மார்களின் குடும்பத்தார்களில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
கோகாத்தியர்கள்
கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர். அம்ராமின் மகன்கள் ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான இடத்தை என்றென்றைக்கும் பரிசுத்தமாகக் காக்கவும், என்றைக்கும் யெகோவாவுக்கு முன்பாக தூபங்காட்டவும், அவருக்கு ஆராதனை செய்யவும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கவும் பிரித்துவைக்கப்பட்டார்கள். தேவனுடைய மனிதனாகிய மோசேயின் மகன்களோ, லேவிகோத்திரத்தார்களுக்குள் எண்ணப்பட்டார்கள். மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள். கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான். எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள். இத்சேயாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான்.
எப்ரோனின் மகன்களில் எரியா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம். ஊசியேலின் மகன்களில் மீகா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது இஷியா.
மெராரியர்கள்
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள். எலெயாசார் மரணமடைகிறபோது, அவனுக்கு மகள்களே அன்றி மகன்கள் இல்லை; கீசின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இவர்களைத் திருமணம் செய்தார்கள். மூசியின் மகன்கள் மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர். தங்கள் பிதாகளுடைய குடும்பங்களின்படி, தகப்பன்மார்களில் தலைவனாக இருந்த லேவி சந்ததிகளின்படி பெயர்பெயராக குறிக்கப்பட்டபடி, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள். இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தமது மக்களை இளைப்பாறியிருக்கச்செய்தார்; அவர் 23:25 அவர்கள் என்றென்றைக்கும் எருசலேமில் தங்குவார் என்றும், இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும்,
தாவீது அவர்களைக்குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி மகன்களில் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஆரோனுடைய மகன்களின் கீழ் யெகோவாவுடைய ஆலயத்தின் ஊழியமாக நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், எல்லா பரிசுத்த பணிபொருட்களின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனையின் வேலையையும் விசாரிப்பதும், சமுகத்து அப்பங்களையும், உணவுபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான எல்லா எடையையும் அளவையும் விசாரிப்பதும்,
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் யெகோவாவைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற எல்லா வேளைகளிலும், எண்ணிக்கைக்கு உள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அதின்படி செய்ய, யெகோவாவுக்கு முன்பாக நிற்பதும்,
ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த இடத்தின் காவலையும் தங்களுடைய சகோதரர்களாகிய ஆரோனுடைய மகன்களின் காவலையும் காப்பதும், யெகோவாவுடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாக இருந்தது.
ஆசாரியர்களின் பிரிவுகள்
அவர்களைப் பிரிக்கிறபோது, இத்தாமாரின் சந்ததிகளைவிட எலெயாசாரின் சந்ததிகளுக்குள்ளே தலைவர்கள் அதிகமானபேர் இருந்ததால், எலெயாசாரின் மகன்களில் பதினாறுபேர் தங்களுடைய பிதாக்களுடைய குடும்பத்திற்கும், இத்தாமாரின் மகன்களில் எட்டுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்திற்கும் தலைவர்களாக வைக்கப்பட்டார்கள். எலெயாசாரின் சந்ததியாரிலும் இத்தாமாரின் சந்ததியாரிலும், பரிசுத்த இடத்திற்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாக இருக்கும்படி, இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்செய்யாமல் சீட்டுப்போட்டு அவர்களைப் பிரித்தார்கள்.
லேவியர்களில் எழுத்தாளனாகிய செமாயா என்னும் நெதனெயேலின் மகன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களும் லேவியர்களுமான குடும்பத்தார்களின் தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்; ஒரு குடும்பத்தின் சீட்டு எலெயாசாரின் சந்ததிக்கு விழுந்தது; பின்பு அப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
முதலாவது சீட்டு யோயாரீபிற்கும், இரண்டாவது யெதாயாவிற்கும், மூன்றாவது ஆரிமிற்கும், நான்காவது செயோரீமிற்கும், ஐந்தாவது மல்கியாவிற்கும், ஆறாவது மியாமீனிற்கும், ஏழாவது அக்கோத்சிற்கும், எட்டாவது அபியாவிற்கும்,
ஒன்பதாவது யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும், பதினோராவது எலியாசிபிற்கும், பன்னிரெண்டாவது யாக்கீமிற்கும், பதின்மூன்றாவது உப்பாவிற்கும், பதினான்காவது எசெபெயாபிற்கும், பதினைந்தாவது பில்காவிற்கும், பதினாறாவது இம்மேரிற்கும்,
பதினேழாவது ஏசீரிற்கும், பதினெட்டாவது அப்சேசிற்கும், பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும், இருபத்தோராவது யாகினிற்கும், இருபத்திரண்டாவது காமுவேலிற்கும், இருபத்துமூன்றாவது தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தது.
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்படி, தங்கள் செயல்முறை வரிசைகளில் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும் அவர்களுடைய ஊழியத்திற்காகச் செய்யப்பட்ட வகுப்புகள் இவைகளே.
மீதமுள்ள லேவியர்கள்
லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும், ரெகபியாவின் சந்ததியில் மூத்தவனாகிய இஷியாவும், இத்சாரியர்களில் செலெமோத்தும், செலெமோத்தின் சந்ததியில் யாகாத்தும், எப்ரோனின் சந்ததியில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் மகனாகிய அமரியாவும், மூன்றாம் மகனாகிய யாகாசியேலும், நான்காம் மகனாகிய எக்காமியாமும், ஊசியேலின் சந்ததியில் மீகாவும், மீகாவின் சந்ததியில் சாமீரும், மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் மகன்களில் சகரியாவும்,
மெராரியின் சந்ததியில் மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் சந்ததியில் பேனோவும், மெராரியின் சந்ததியில் யாசியாவின் சந்ததியில் பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும், மகேலியின் சந்ததியில் மகன்களில்லாத எலெயாசாரும்,
கீசின் சந்ததியில் யெராமியேலும், மூசியின் சந்ததியில் மகலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய குடும்பங்களின்படியே வரிசைப்படுத்தப்பட்ட லேவியர்கள் இவர்களே. இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் குடும்பத் தலைவர்களாக இருக்கிற தலைவர்களுக்கும் முன்பாக, தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் சந்ததி செய்ததுபோல, தங்களில் இருக்கிற குடும்பத் தலைவர்களான தலைவர்களுக்கும், அவர்களுடைய சிறிய சகோதரர்களுக்கும் சரிசமமாக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.
பாடகர்கள்
கொம்பைத் தொனிக்கச்செய்ய, தேவனுடைய காரியத்தில் ராஜாவுக்கு தீர்க்கதரிசியான வாலிபனாகிய ஏமானின் மகன்களான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே. இவர்கள் எல்லோரும் ஏமானின் மகன்களாக இருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினான்கு மகன்களையும் மூன்று மகள்களையும் கொடுத்தார்.
இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்படிக் யெகோவாவுடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருக்கள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மார்களாகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்களிடத்தில் இருந்தார்கள். யெகோவாவைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, திறமைவாய்ந்தவர்கள் தங்களுடைய சகோதரர்களோடு அவர்கள் எண்ணிக்கைக்கு இருநூற்று எண்பத்தெட்டுப்பேர்களாக இருந்தார்கள். அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும், மாணவனும், சரிசமமாக முறைவரிசைக்காக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.
முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், இரண்டாவது கெதலியா குடும்பத்தில், அவனுடைய சகோதரர்கள், அவனுடைய மகன்கள் என்றும் பன்னிரெண்டு நபர்களுக்கும், மூன்றாவது சக்கூர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், நான்காவது இஸ்ரி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், ஐந்தாவது நெதானியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
ஆறாவது புக்கியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், ஏழாவது எசரேலா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், எட்டாவது எஷாயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், ஒன்பதாவது மத்தனியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பத்தாவது சிமேயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், பதினோராவது அசாரியேல், அவனுடைய மகன்கள் அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், பன்னிரண்டாவது அஷாபியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், பதின்மூன்றாவது சுபவேல், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பதினான்காவது மத்தித்தியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், பதினைந்தாவது எரேமோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், பதினாறாவது அனனியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பதினெட்டாவது அனானி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், பத்தொன்பதாவது மலோத்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், இருபதாவது எலியாத்தா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், இருபத்தோராவது ஒத்திர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
இருபத்திரண்டாவது கிதல்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், இருபத்துமூன்றாவது மகாசியோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும், இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும் விழுந்தது.
காவலர்கள்
ஓபேத்ஏதோமின் மகன்கள் மூத்தவனாகிய செமாயாவும், யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் மகன்களுமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார். அவனுடைய மகனாகிய செமாயாவுக்கும் மகன்கள் பிறந்து, அவர்கள் பெலசாலிகளாக இருந்து, தங்களுடைய தகப்பன் குடும்பத்தார்களை ஆண்டார்கள்.
செமாயாவுக்கு இருந்த மகன்கள் ஒத்னியும், பெலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சபாத் என்னும் அவனுடைய சகோதரர்களும், எலிகூவும் செமகியாவுமே. ஓபேத்ஏதோமின் சந்ததிகளும் அவர்களுடைய மகன்களும், சகோதரர்களுமாகிய ஊழியத்திற்குப் பலத்த பெலசாலிகளான அவர்களெல்லோரும் அறுபத்திரண்டுபேர். மெஷெலேமியாவின் மகன்களும், சகோதரர்களுமான பெலசாலிகள் பதினெட்டுபேர்.
மெராரியின் மகன்களில் ஓசா என்பவனுடைய மகன்கள்: சிம்ரி என்னும் தலைவன்; இவன் மூத்தவனாக இல்லாவிட்டாலும் இவனுடைய தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான். இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் மகன்களானவர்கள்; ஓசாவின் மகன்களும் சகோதரர்களும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
காவல்காரர்களான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரர்களுக்கு ஒத்த முறையாகக் யெகோவாவுடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாக பணிவிடை செய்ய இவர்கள் பிரிக்கப்பட்டு, தங்கள் பிதாக்களின் குடும்பத்தார்களாகிய சிறியவர்களும், பெரியவர்களுமாக இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள். கீழ்ப்புறத்திற்கு செலேமியாவுக்கு சீட்டு விழுந்தது; விவேகமுள்ள ஆலோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவனுடைய மகனுக்கு சீட்டு போட்டபோது, அவனுடைய சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவனுடைய மகன்களுக்கு அசுப்பீம் வீட்டிற்கும், சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
கிழக்கே லேவியர்களான ஆறுபேரும், வடக்கே பகலிலே நான்குபேர்களும், தெற்கே பகலிலே நான்குபேர்களும், அசுப்பீம் வீட்டின் அருகில் இரண்டிரண்டுபேர்களும், வெளிப்புறமான வாசல் அருகில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நான்குபேர்களும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேர்களும் வைக்கப்பட்டார்கள். கோராகின் சந்ததிகளுக்குள்ளும், மெராரியின் சந்ததிகளுக்குள்ளும், வாசல் காக்கிறவர்களின் பிரிவுகள் இவைகளே.
கருவூல அலுவலர்களும் மற்ற அலுவலர்களும்
மற்ற லேவியர்களில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் கவனிக்கிறவனுமாக. லாதானின் மகன்கள் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய மகன்களில் தலைமையான குடும்பத்தலைவர்களாக இருந்த யெகியேலியும், யெகியேலியின் மகன்களாகிய சேத்தாமும், அவனுடைய சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை கவனிக்கிறவர்களாக இருந்தார்கள். அம்ராமியர்களிலும், இத்சாரியர்களிலும், எப்ரோனியர்களிலும், ஊசியேரியர்களிலும், சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாக இருந்தார்கள். மோசேயின் மகனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷக் கண்காணியாக இருந்தான். எலியேசர் மூலமாக அவனுக்கு இருந்த சகோதரர்களானவர்கள், இவனுடைய மகன் ரெகபியாவும், இவனுடைய மகன் எஷாயாவும், இவனுடைய மகன் யோராமும், இவனுடைய மகன் சிக்ரியும், இவனுடைய மகன் செலோமித்துமே.
ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான குடும்பத்தலைவர்களும், தளபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து, யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்த செலோமித்தும் அவனுடைய சகோதரர்களும் கவனித்தார்கள். தீர்க்கதரிசியாகிய சாமுவேலும், கீசின் மகனாகிய சவுலும், நேரின் மகனாகிய அப்னேரும், செருயாவின் மகனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவனுடைய சகோதரர்கள் கையின்கீழும் இருந்தது.
இத்சாரியர்களில் கெனானியாவும் அவனுடைய மகன்களும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரர்களும் அலுவலர்களுமாகவும் இருந்தார்கள். எப்ரோனியர்களில் அஷபியாவும் அவனுடைய சகோதரர்களுமாகிய ஆயிரத்து எழுநூறு பெலசாலிகள் யோர்தானுக்கு இந்தப்பக்கம் மேற்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் யெகோவாவுடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.
எப்ரோனியர்களில் எரியாவும் இருந்தான்; அவனுடைய குடும்பத்தார்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைவனாக இருந்தவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருடத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து யாசேரிலே மிகுந்த பலமுள்ள வீரர்கள் காணப்பட்டார்கள். பெலசாலிகளாகிய அவனுடைய சகோதரர்கள் இரண்டாயிரத்து எழுநூறு முதன்மை தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுடைய எல்லாக் காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்திற்காகவும், ரூபனியர்கள்மேலும், காத்தியர்கள்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.
ராணுவப்பிரிவுகள்
இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவனுடைய வகுப்பிலே மிக்லோத் தகுதியில் இரண்டாவதாக இருந்தான்; அவனுடைய வகுப்பிலே இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். மூன்றாவது மாதத்தின் மூன்றாம் தளபதி யோய்தாவின் மகனாகிய பெனாயா என்னும் ஆசாரியனும் தலைவனுமானவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். இந்தப் பெனாயா அந்த முப்பது பலசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாக இருந்தான்; அவனுடைய வகுப்பை அவனுடைய மகனாகிய அமிசபாத் விசாரித்தான்.
நான்காவது மாதத்தின் நான்காம் தளபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவனுடைய மகன் செப்தியாவுமே; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் தளபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். ஆறாவது மாதத்தின் ஆறாம் தளபதி இக்கேசின் மகன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
ஏழாவது மாதத்தின் ஏழாம் தளபதி எப்பிராயீம் மகன்களில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். எட்டாவது மாதத்தின் எட்டாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய சிப்பெக்காய் என்னும் ஊசாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் தளபதி பென்யமீனர்களில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
பத்தாவது மாதத்தின் பத்தாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய மகராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். பதினோராவது மாதத்தின் பதினோராம் தளபதி எப்பிராயீம் கோத்திரத்தில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் தளபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்து நான்காயிரம்பேர் இருந்தார்கள்.
கோத்திரத்தின் அலுவலர்கள்
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபன் கோத்திரத்திற்குத் தலைவன் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோன் கோத்திரத்திற்கு மாக்காவின் மகன் செப்பத்தியா. லேவி கோத்திரத்திற்கு கேமுவேலின் மகன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்கு சாதோக். யூதா கோத்திரத்திற்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் மகன் ஒம்ரி. செபுலோன் கோத்திரத்திற்கு ஒப்தியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி கோத்திரத்திற்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத். எப்பிராயீம் கோத்திரத்திற்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு பெதாயாவின் மகன் யோவேல். கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் மகன் யாசியேல். தாண் கோத்திரத்திற்கு எரோகாமின் மகன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.
இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லியிருந்ததால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை. செருயாவின் மகன் யோவாப் எண்ணத்துவங்கியும் முடிக்காமற்போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்த எண்ணிக்கை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே எழுதப்படவில்லை.
ராஜாக்களுடைய மேற்பார்வையாளர்கள்
ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் மகன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் பாதுகாப்பான கோபுரங்களிலும் நிலத்தின் வருமான கருவூலங்களின்மேல் உசியாவின் மகன் யோனத்தானும், நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலை செய்கிறவர்களின்மேல் கேலூப்பின் மகன் எஸ்ரியும், திராட்சைத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சைத்தோட்டங்களின் பலனாகிய திராட்சைரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும், பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை மரங்களின்மேலும் கெதேரியனான பாகாலானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும், சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் மகன் சாப்பாத்தும்,
ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும், ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் தாவீது ராஜாவின் பொருட்களுக்கு விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.
தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனிதன் ஆலோசனைக்காரனாக இருந்தான்; அக்மோனியின் மகன் யெகியேல் ராஜாவின் மகன்களோடு இருந்தான். அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான்; அற்கியனான ஊசாய் ராஜாவின் தோழனாயிருந்தான். பெனாயாவின் மகன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாக இருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாக இருந்தான்.
ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள்
அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்து காலூன்றி நின்று: என்னுடைய சகோதரர்களே, என்னுடைய மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதப்படியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என்னுடைய மனதிலே நினைத்து, கட்டுவதற்கு ஆயத்தமும் செய்தேன். ஆனாலும் தேவன்: நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனிதனாக இருந்து, ரத்தத்தை சிந்தினாய் என்றார்.
இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாக இருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா என்னுடைய தகப்பனுடைய வீட்டார்களில் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் என்னுடைய தகப்பன் குடும்பத்தையும் தலைமையாகத் தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என்னுடைய தகப்பனுடைய மகன்களுக்குள் என்மேல் பிரியம் வைத்தார். யெகோவா எனக்கு அநேக மகன்களைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் யெகோவாவுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு, அவர் என்னுடைய எல்லா மகன்களிலும் என்னுடைய மகனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,
அவர் என்னை நோக்கி: உன்னுடைய மகனாகிய சாலொமோனே என்னுடைய ஆலயத்தையும் என்னுடைய முற்றங்களையும் கட்டுவானாக; அவனை எனக்கு மகனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன். இந்தநாளில் நடக்கிறபடியே அவன் என்னுடைய கற்பனைகளின்படியும் என்னுடைய நியாயங்களின்படியும் செய்ய உறுதியாக இருப்பானானால், அவனுடைய ராஜ்ஜியபாரத்தை என்றென்றைக்கும் உறுதிப்படுத்துவேன் என்றார்.
இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாக அனுபவித்து, உங்களுக்குப் பிறகு அதை உங்களுடைய பிள்ளைகளுக்குச் சுதந்திரமாக வைக்கும்படி, நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று யெகோவாவின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார். இப்போதும் எச்சரிக்கையாக இரு; பரிசுத்த இடமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்காகக் யெகோவா உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடத்து என்று சொன்னான்.
தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன இடம் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய யெகோவாவுடைய ஆலயமுற்றங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,
ஆசாரியர்களையும் லேவியர்களையும் வரிசைகளாக பிரிப்பதற்கும், யெகோவாவுடைய ஆலய பணிவிடைவேலை அனைத்திற்கும், யெகோவாவுடைய ஆலயத்து வேலையின் பணிபொருட்கள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான். அவன் பற்பல வேலைக்கு வேண்டிய எல்லாப் பொற்பாத்திரங்களுக்காக எடையின்படி பொன்னையும், பற்பல வேலைக்கு வேண்டிய எல்லா வெள்ளிப்பாத்திரங்களுக்காக எடையின்படி வெள்ளியையும், பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் எடையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளிள் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் எடையின்படி வேண்டிய வெள்ளியையும்,
சமூகத்து அப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் எடையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியையும், முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணங்களில் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் எடையின்படி வேண்டியதையும், வெள்ளிக் கிண்ணங்களில் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் எடையின்படி வேண்டியதையும்,
தூபங்காட்டும் பீடத்திற்கு எடையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, இறக்கைகளை விரித்துக் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து, இந்த மாதிரியின்படி எல்லா வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் யெகோவாவுடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.
தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாக இருந்து, இதை நடத்து: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய யெகோவா என்னும் என்னுடைய தேவன் உன்னோடு இருப்பார்; யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதின் எல்லா செய்கைகளையும் நீ முடிக்கும்வரை, அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார். இதோ, தேவனுடைய ஆலயத்து வேலைக்கெல்லாம் ஆசாரியர்கள் லேவியர்களுடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லா செய்கைக்கும் சகலவித வேலையிலும் திறமையுள்ளவர்களான மனப்பூர்வமுள்ள சகல மனிதர்களும், உன்னுடைய சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், எல்லா மக்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.
ஆலயம் கட்டுவதற்கான பரிசுகள்
இன்னும் என்னுடைய தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சேமித்த அனைத்தையும்தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என்னுடைய தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன். அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும். பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாக்கவும், கைவினைக் கலைஞர்கள் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன். இப்போதும் உங்களில் இன்றையதினம் யெகோவாவுக்குத் தன்னுடைய கைக்காணிக்கைகளைச் செலுத்த மனபூர்வமானவர்கள் யார் என்றான்.
அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களும், நூறுபேர்களுக்குத் தலைவர்களும், ராஜாவின் வேலைக்காரர்களாகிய பிரபுக்களும் மனப்பூர்வமாக, தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து 29:7 170,550. 7. கிலோ பொன்னையும், பத்தாயிரம் தங்கக்காசையும் 29:7 10,000 டன் , பத்தாயிரம் தாலந்து 29:7 வெள்ளியையும், பதிணெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும் 29:7 375 டன் , லட்சம் தாலந்து 29:7 3,750 டன் இரும்பையும் கொடுத்தார்கள்.
யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள். இப்படி மனப்பூர்வமாகக் கொடுத்ததற்காக மக்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடு உற்சாகமாகக் யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.
தாவீதின் ஜெபம்
ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் முற்பிதாவாகிய இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, எல்லாக் காலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர். ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். இப்போதும் எங்களுடைய தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.
இப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் யார்? என்னுடைய மக்கள் யார்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய முன்னோர்கள் எல்லோரைப்போலவும் அந்நியர்களாகவும் வழிப்போக்கர்களாகவும் இருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.
எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் சேமித்திருக்கிற இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது. என்னுடைய தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாகக் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய மக்களும் உமக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன்.
ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவே, உமது மக்களின் இருதயத்தில் உண்டான இந்த சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும். என்னுடைய மகனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்செய்த இந்த அரண்மனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.
அதின்பின்பு தாவீது சபையார் அனைத்தையும் நோக்கி: இப்போது உங்களுடைய தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார்கள் எல்லோரும் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து யெகோவாவையும் ராஜாவையும் பணிந்துகொண்டு.
சாலொமோன் ராஜாவாக அங்கீகரிக்கப்படுதல்
அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடு யெகோவாவுக்கு முன்பாக சாப்பிட்டு குடித்து, தாவீதின் மகனாகிய சாலொமோனை இரண்டாம் முறை ராஜாவாக்கி, யெகோவாவுக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்செய்தார்கள். அப்படியே சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே யெகோவாவுடைய சிங்காசனத்தில் ராஜாவாக அமர்ந்திருந்து பாக்கியசாலியாக இருந்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.
எல்லா பிரபுக்களும் பெலசாலிகளும் தாவீது ராஜாவினுடைய எல்லா மகன்களோடும் ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள். இஸ்ரவேலர்கள் எல்லோரும் காணக் யெகோவா சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, முன்பே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாமலிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.
தாவீதின் மரணம்
இவ்விதமாக ஈசாயின் மகனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்திற்கும் ராஜாவாக இருந்தான். அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருடங்கள்; எப்ரோனிலே ஏழு வருடங்களும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருடங்களும் ராஜாவாக இருந்தான். அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாக, நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின்பு, அவனுடைய மகனாகிய சாலொமோன் அவனுடைய இடத்திலே ஆட்சிசெய்தான். தாவீது ராஜாவினுடைய ஆரம்பம்முதல் கடைசிவரை செய்த எல்லா செயல்களும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்ஜியங்கள் அனைத்திற்கும் நடந்த காலசம்பவங்களும், தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய காத்தின் வரலாற்று புத்தகத்திலும் எழுதியிருக்கிறது.