திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;
லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;
மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து,
சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;
அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து,
தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.
ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும்
உன்னுடைய வாயைத் திற.
உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து,
சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.
குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்?
அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.
அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்;
அவனுடைய செல்வம் குறையாது.
அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல,
நன்மையையே செய்கிறாள்.
ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி,
தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள்.
அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்;
தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.
இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து,
தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்;
தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு,
தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.
தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்;
இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும்.
தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்;
அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து,
ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.
தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால்,
தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.
இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்;
மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.
அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது
பெயர் பெற்றவனாக இருக்கிறான்.
மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்;
கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது;
வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்;
தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது.
அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல்,
தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள்.
அவளுடைய பிள்ளைகள் எழும்பி,
அவளை பாக்கியவதி என்கிறார்கள்;
அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:
அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு;
நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.
செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்,
யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.
அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்;
அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.ஆசிரியர்
இந்த புத்தகம் நேராக ஆசிரியரைக் குறிப்பிடவில்லை. தன்னை பிரசங்கி என்று 1:1 ல் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தன்னை தாவீதின் குமாரனான எருசலேமின் இராஜாவாகிய பிரசங்கி என்று சொல்லுகிறான். எனக்கு முன் எருசலேமிலிருந்த எல்லாரைப் பார்க்கிலும் ஞானமடைந்து அனேக நீதிமொழிகளை சேர்த்தேன் என்கிறான் (பிரசங்கி 1:1, 16; 12:9). இஸ்ரவேலை ஆட்சி செய்ய தாவீதுக்கு பிறகு சிங்காசனத்தில் சாலோமோன் உட்கார்ந்தான். (1:12) சாலோமோன் தான் ஆசிரியர் என்று சில காரியங்கள் இந்த புத்தகம் ஆதாரம் தருகிறது. சாலோமோன் மரணத்திற்கு பிறகு சில பகுதிகள் வேறு சிலரால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 940 க்கும் 931 க்கும். இடையில் எழுதப்பட்டது.
இந்த புத்தகம் சாலோமோனின் கடைசி நாட்களில், எருசலேமில் எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேல் மக்களுக்கும், வேதம் வாசிக்கிற அனைவருக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
இந்த புத்தகம் ஒரு சரியான எச்சரிப்பை நமக்கு தருகிறது. நோக்கமில்லாமல், தேவபயமில்லாமல் வாழ்வது, மாயையையும், காற்றை பின்தொடர்வதுபோல் இருக்கிறது. நாம் இன்பத்தை, பணத்தை, ஞானத்தை, புதிய காரியங்களை ஆராய்வதில், வாழ்ந்தாலும், நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு முடிவு உண்டு. கடைசியில் நாம் மாயையில் வாழ்ந்தோம் என்று எண்ணமே நமக்கு தோன்றுகிறது. நாம் தேவனுக்கு வாழும்போதுதான், வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.
மையக் கருத்து
தேவனைத் தவிர எல்லாம் மாயையே.
பொருளடக்கம்
1. முன்னுரை — 1:1-11
2. வாழ்க்கையின் பலபாகங்களும் மாயைதான் — 1:12-5:7
3 தேவனுக்கு பயந்து நடக்கவேண்டும். — 5:8-12:8
4 காரியத்தின் முடிவு — 12:9-14
எல்லாம் மாயை
அழ ஒரு காலம் உண்டு, சிரிக்க ஒரு காலம் உண்டு;
புலம்ப ஒரு காலம் உண்டு, நடனமாட ஒரு காலம் உண்டு;
கற்களை எறிந்துவிட ஒரு காலம் உண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலம் உண்டு;
தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமல் இருக்க ஒரு காலம் உண்டு;
தேட ஒரு காலம் உண்டு, இழக்க ஒரு காலம் உண்டு;
காப்பாற்ற ஒரு காலம் உண்டு, எறிந்துவிட ஒரு காலம் உண்டு;
கிழிக்க ஒரு காலம் உண்டு, தைக்க ஒரு காலம் உண்டு;
மவுனமாக இருக்க ஒரு காலம் உண்டு, பேச ஒரு காலம் உண்டு;
நேசிக்க ஒரு காலம் உண்டு, பகைக்க ஒரு காலம் உண்டு;
யுத்தம்செய்ய ஒரு காலம் உண்டு, சமாதானப்படுத்த ஒரு காலம் உண்டு.
வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு
அதினால் பலன் என்ன?
மனிதர்கள் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.
அவர் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்களுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆரம்பம்முதல் முடிவுவரை செய்துவரும் செயல்களை மனிதன் கண்டுபிடிக்கமாட்டான்.
மகிழ்ச்சியாக இருப்பதும் உயிரோடிருக்கும்போது நன்மைசெய்வதையும்தவிர, வேறொரு நன்மையும் மனிதனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
அன்றியும் மனிதர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் குடித்து தங்களுடைய எல்லா பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய வெகுமதி.