யெகோவா மோசேயைக்கொண்டு தங்களுடைய பிதாக்களுக்கு விதித்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலர்கள் அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
இப்படி இஸ்ரவேல் மக்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களாகிய இவர்களின் நடுவே குடியிருந்து,
அவர்களுடைய மகள்களை திருமணம்செய்து, தங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்.
ராஜாக்களே, கேளுங்கள்;
அதிபதிகளே, செவிகொடுங்கள்;
நான் யெகோவாவைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கீர்த்தனம்செய்வேன்.
யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு,
ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது,
பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது,
மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது.
யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது;
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது.
ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும்,
யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள்
பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள்.
தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும்,
இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும்,
கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது.
புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?
மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின்
5:11
சங்கீத பாடகர்கள்
இரைச்சலுக்கு நீங்கினவர்கள்
அங்கே யெகோவாவின் நீதிநியாயங்களையும்,
அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த
நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்;
அதுமுதல் யெகோவாவின் மக்கள்
நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள்.
விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு;
பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே,
உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.
மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்;
யெகோவா எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.
அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது;
உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்;
மாகீரிலிருந்து அதிபதிகளும்,
செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்;
பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும்
பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்;
ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.
மந்தைகளின் சத்தத்தைக் கேட்க,
நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன?
ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி.
கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்;
தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன?
ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி,
மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.
செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல்
மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள்.
ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்;
அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்;
அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை.
வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று;
நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன.
கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே,
அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே,
நீ பெலவான்களை மிதித்தாய்.
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே,
பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
மேரோசைச் சபியுங்கள்;
அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று
யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்;
அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை;
பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே.
பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்;
கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.
தண்ணீரைக் கேட்டான்,
பாலைக் கொடுத்தாள்;
ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
தன்னுடைய கையால் ஆணியையும்,
தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து,
சிசெராவை அடித்தாள்;
அவனுடைய தலையில் உருவக்குத்தி,
அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள்.
அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்;
அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான்.
“சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து:
அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன?
அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன’ என்று புலம்பினாள்.
அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக:
அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ,
ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும்,
சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும்,
கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும்,
5:30
கொள்ளையிட்டவர்களின்
என்
கழுத்திற்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்;
அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும்” என்று பாடினார்கள். பின்பு தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது.
மீதியானியர்கள் இஸ்ரவேலரிடம் போரிடுதல்
நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத் தகுந்ததை அவருக்குச் செய்து, இப்படி இந்த நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாக இருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாக இருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாக இருக்கட்டும்.
இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தார்களையும், மில்லோவின் குடும்பத்தினரையும் எரிக்கவும், சீகேம் பட்டணத்தார்களிலும் மில்லோவின் குடும்பத்தினரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கை எரிப்பதாக என்று யோதாம் சொல்லி,
தன்னுடைய சகோதரனான அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.
அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா மக்களோடும் சல்மோன் மலையில் ஏறி, தன்னுடைய கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கிளையை வெட்டி, அதை எடுத்து, தன்னுடைய தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த மக்களைப் பார்த்து: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் விரைவாக என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.
அப்படியே எல்லா மக்களும் அவரவர் ஒவ்வொரு கிளைகளை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்தக் கோட்டைக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த கோட்டையை எரித்துப்போட்டார்கள்; அதினால் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய 1,000 சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் இறந்தார்கள்.
பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு எதிராக முகாமிட்டு, அதைப் பிடித்தான்.
அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த கோபுரம் இருந்தது; அங்கே எல்லா ஆண்களும் பெண்களும் பட்டணத்து மனிதர்கள் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, கோபுரத்தின்மேல் ஏறினார்கள்.
அபிமெலேக்கு அந்த கோபுரம்வரை வந்து, அதின்மேல் யுத்தம்செய்து, கோபுரத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படி, வாசலின் அருகே வந்தான்.
அப்பொழுது ஒரு பெண் ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவனுடைய மண்டையை உடைத்தது.
உடனே அவன் தன்னுடைய ஆயுதம் ஏந்திய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு பெண் என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடி, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடு சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை, பட்டயம் மறுபக்கம் துளையிட்டு வெளியேறுமாறு குத்தினான், அவன் இறந்துபோனான்.
இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.
அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார்.
அவர்கள் அந்த ஆண்டுமுதல் 18 வருடங்களாக யோர்தான் நதிக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
அம்மோனியர்கள் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தினர்மேலும் யுத்தம்செய்ய யோர்தான் நதியைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள்.
யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: எகிப்தியர்களும், எமோரியர்களும், அம்மோனியர்களும், பெலிஸ்தர்களும்,
சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா?