யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் இங்கே வந்து, உங்களுடைய தேவனாகிய யெகோவாடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான்.
பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியர்களையும், ஏத்தியர்களையும், ஏவியர்களையும், பெரிசியர்களையும், கிர்காசியர்களையும், எமோரியர்களையும், எபூசியர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக:
இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது.
அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் சேராகின் மகனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன் கட்டியையும், அவனுடைய மகன்களையும், மகள்களையும், அவனுடைய மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவனுடைய கூடாரத்தையும், அவனுக்குண்டான அனைத்தையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோனார்கள்.
அப்பொழுது யோசுவா: யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் மலையில் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு இரும்பு ஆயுதம் படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
அதின்மேல் யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் எழுதினான்.
இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிப்பதற்காக யெகோவாவின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர்கள் எல்லோரும், அவர்களுடைய மூப்பர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களான ஆசாரியர்களுக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிப்பேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிப்பேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.
ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
உங்களிடம் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்களுடைய வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.
நாங்கள் இந்தத் திராட்சைரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள்.
சமபூமியில் இருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,
யாகசா, கெதெமோத், மெபாகாத்,
கீரியாத்தாயீம், சீப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
கீனா. திமோனா, ஆதாதா,
கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
சீப், தேலெம், பெயாலோத்,
ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
ஆமாம், சேமா, மொலாதா,
ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத்,
ஆசார்சூவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,
பாலா, ஈயிம், ஏத்சேம்,
எல்தோலாத், கெசீல், ஓர்மா,
சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
லெபாயோத், சில்லீம், ஆயீன், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது.
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினான்கு.
மலைகளில் சாமீர், யாத்தீர், சோக்கோ,
தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
கோசேன், ஓலோன், கிலோ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று.
அதற்கு யோசேப்பின் சந்ததியினர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் கிராமங்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியர்களிடமும் இரும்பு இரதங்கள் உண்டு என்றார்கள்.
யோசுவா, யோசேப்பு வம்சத்தார்களாகிய எப்பிராயீமியர்களையும் மனாசேயர்களையும் நோக்கி: நீங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமட்டும் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.
அது காடாக இருக்கிறபடியினாலே, அதை வெட்டிச் சீர்படுத்துங்கள், அப்பொழுது அதின் கடைசிவரைக்கும் உங்களுடையதாக இருக்கும்; கானானியர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாக இருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.
பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,
பெத் அரபா, செமராயிம், பெத்தேல்,
ஆவீம், பாரா. ஓப்ரா,
கேப்பார் அமோனாய், ஒப்னி, கேபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
கிபியோன், ராமா, பேரோத்,
மிஸ்பே, கெபிரா, மோசா,
ரெக்கேம், இர்பெயெல், தாராலா,
சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கிபியாத், கீரேயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பங்குகள் இவைகளே.
நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
இசக்கார் கோத்திரத்தார்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
அப்பிராயீம், சீகோன் அனாகராத்,
ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,
ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.
அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உண்டு.
ஐந்தாம் சீட்டு ஆசேர் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கே இருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்கிற்கும் பெத்தேமேக்கிற்கும் நேகியெலிற்கும் வந்து, இடதுபுறமான காபூலிற்கும்,
எபிரோனிற்கும், ரேகோபிற்கும், அம்மோனிற்கும், கானாவிற்கும், பெரிய சீதோன்வரைக்கும் போகும்.
ஆறாம் சீட்டு நப்தலி கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
நப்தலி கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்வரைக்கும் போய், யோர்தானில் முடியும்.
அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகக்கிற்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
பாதுகாப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,
ஆதமா, ராமா, ஆத்சோர்,
கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்,
ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
சாலாபீன், ஆயலோன், யெத்லா,
ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,
யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யோப்பாவுக்கு எதிரான எல்லையுமே.
அப்பொழுது ரூபன் கோத்திரத்தார்களும், காத் கோத்திரத்தார்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், இஸ்ரவேலின் ஆயிரம்பேர்களின் தலைவர்களுக்கு மறுமொழியாக:
தேவாதி தேவனாகிய யெகோவா, தேவாதி தேவனாகிய யெகோவாவே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, யெகோவாவுடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருப்பாராக.
ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்த பலிபீடத்தைக் கட்டினதே அல்லாமல், யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாவது போஜனபலியையாவது சமாதானபலிகளையாவது செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், யெகோவா அதை விசாரிப்பாராக.
நாளைக்கு எங்களோடாவது, எங்களுடைய சந்ததியார்களோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின யெகோவாவுடைய பலிபீடத்தின் சாயலான பலிபீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.
நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கு எதிராகக் கலகம்செய்வதும், இன்று யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாக இருப்பதாக என்றார்கள்.