யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும்
சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள்,
இளைப்பாறுதல் அடையமாட்டாள்;
அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும்
அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.
பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால்,
சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது;
அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது;
அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்;
அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்;
அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள்,
அவளுடைய பகைவர்கள் செழித்திருக்கிறார்கள்;
அவளுடைய மிகுதியான பாவங்களுக்காக யெகோவா அவளைச் சஞ்சலப்படுத்தினார்;
அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.
சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது;
அவளுடைய தலைவர்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி,
பின்தொடருகிறவனுக்கு முன்பாக பலமில்லாமல் நடந்துபோனார்கள்.
தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே
எருசலேம் ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்;
அவளுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவளுடைய மக்கள் விரோதிகளின் கையிலே விழும்போது,
பகைவர்கள் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்து ஏளனம் செய்தார்கள்.
எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்;
ஆதலால் தீட்டான பெண்ணைப்போலானாள்;
அவளைக் கனப்படுத்தியவர்கள் எல்லோரும் அவளை அசட்டை செய்கிறார்கள்;
அவளுடைய நிர்வாணத்தைக் கண்டார்கள்;
அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது;
தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்;
ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்;
தேற்றுபவர்கள் இல்லை;
யெகோவாவே, என் சிறுமையைப் பாரும்;
பகைவன் பெருமைபாராட்டினானே.
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்;
உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள்
உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.
அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்;
தங்களுடைய உயிரைக் காப்பாற்றத்
தங்களுக்குப் பிரியமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்;
யெகோவாவே, நோக்கிப்பாரும்;
நினைக்கப்படாதவளானேன்.
வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே,
இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா?
யெகோவா தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால்
எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார்,
அது அவைகளில் பற்றியெரிகிறது;
என் கால்களுக்கு வலையை வீசினார்;
என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்;
தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன்.
என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது;
அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது;
என் பெலனை இழக்கச்செய்தார்;
நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்;
என் வாலிபர்களை நொறுக்குவதற்காக எனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்;
திராட்சைப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல,
ஆண்டவர், மகளாகிய யூதா என்னும் இளம்பெண்ணை மிதித்தார்.
இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண்,
என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது;
என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்;
பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
சீயோன் தன் கைகளை உதவிக்கா விரிக்கிறாள்;
அவளைத் தேற்றுபவர்கள் ஒருவருமில்லை;
யெகோவா யாக்கோபைச் சுற்றிலும் உள்ளவர்களை அவனுக்கு விரோதிகளாகக் கட்டளையிட்டார்;
அவர்களுக்குள்ளே எருசலேம் தீட்டான பெண்ணுக்கு ஒப்பானாள்.
யெகோவா நீதிபரர்;
அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்;
மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்;
என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள்.
என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன்,
அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்;
என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்
தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள்.
யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்;
என் குடல் கொதிக்கிறது; நான் மிகவும் துரோகம் செய்ததினால் என் இருதயம் வேதனைப்படுகிறது;
வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கியது, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை;
என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு,
தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்;
நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும்.
என்னுடைய சகல பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்;
என் பெருமூச்சுகள் மிகுதியாயின,
என் இருதயம் பலவீனமாயிருக்கிறது.
எருசலேமின் மேல் தேவனுடைய கோபம்
அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் வல்லமை முழுவதையும் வெட்டிப்போட்டார்;
விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி,
சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.
பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்;
எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று,
கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்;
மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார்.
ஆண்டவர் பகைவனைப் போலானார்;
இஸ்ரவேலை விழுங்கினார்;
அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்;
அதின் அரண்களை அழித்து, மகளாகிய யூதாவுக்கு மிகுந்த துக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கினார்.
தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாகப் பிடுங்கிப்போட்டார்;
சபைகூடுகிற தம்முடைய இடங்களை அழித்தார்;
யெகோவா சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கச்செய்து,
தமது கடுங்கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் அகற்றிவிட்டார்.
ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்;
தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்;
அதினுடைய அரண்மனைகளின் மதில்களை விரோதியின் கையில் ஒப்புக்கொடுத்தார்;
பண்டிகைநாளில் ஆரவாரம் செய்கிறதுபோல் யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.
யெகோவா, மகளாகிய சீயோனின் மதிலை நிர்மூலமாக்க நினைத்தார்;
நூலைப்போட்டார்; அழிக்காதபடி தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை;
அரண்களையும் மதிலையும் புலம்பச்செய்தார்;
அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது.
எருசலேம் பட்டணத்து வாசல்கள் தரையில் புதைந்துகிடக்கிறது;
அவளுடைய தாழ்ப்பாள்களை உடைத்துப்போட்டார்;
அவளுடைய ராஜாவும் அவளுடைய பிரபுக்களும் அந்நியமக்களுக்குள் இருக்கிறார்கள்;
வேதமுமில்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக் யெகோவாவால் தரிசனம் கிடைப்பதில்லை.
மகளாகிய சீயோனின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாக இருக்கிறார்கள்;
தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்;
சணலாடை உடுத்தியிருக்கிறார்கள்;
எருசலேமின் இளம்பெண்கள் தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
என் மகளாகிய எனது மக்களின் பாடுகளினிமித்தம் கண்ணீர் விடுகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது;
என் குடல்கள் கொதிக்கிறது;
என் ஈரல் உருகி தரையிலே வடிகிறது;
குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் நகரத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கிறார்கள்.
அவர்கள் காயப்பட்டவர்களைப்போல
பட்டணத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கும்போதும்,
தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் உயிரை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி:
தானியமும் திராட்சைரசமும் எங்கே என்கிறார்கள்.
மகளாகிய எருசலேமே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்?
உன்னை எதற்கு ஒப்பிடுவேன்?
மகளாகிய சீயோன் என்னும் இளம்பெண்ணே,
நான் உன்னைத் தேற்றுவதற்கு உன்னை எதற்கு ஒப்பிட்டுச் சொல்லுவேன்?
உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே,
உன்னைக் குணமாக்குகிறவன் யார்?
உன் தீர்க்கதரிசிகள் பொய்யும் பயனற்ற தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்;
அவர்கள் உன்னுடைய சிறையிருப்பு விலகும்படி உன் அக்கிரமத்தை சுட்டிக்காட்டாமல்,
பொய்யானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள்.
வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்;
மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து,
கேலியாக தங்கள் தலைகளை அசைத்து:
பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்;
பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்;
அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே,
இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
யெகோவா தாம் நினைத்ததைச் செய்தார்;
ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்;
அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைவன் மகிழ்ச்சியடையச் செய்தார்;
உன் எதிரிகளின் கொம்பை உயர்த்தினார்.
அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது;
மகளாகிய சீயோனின் மதிலே, இரவும் பகலும் நதியைப்போல கண்ணீர் விடு, ஓய்ந்திராதே,
உன் கண்ணின் கருவிழியை சும்மாயிருக்கவிடாதே.
எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு;
ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு;
எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
யெகோவாவே, யாருக்கு இந்த விதமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்;
பெண்கள், கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பத்தின் பிள்ளைகளை சாப்பிடவேண்டுமோ?
ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?
வாலிபனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்;
என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் பட்டயத்தால் விழுந்தார்கள்;
உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.
பண்டிகைநாளில் மக்கள் கூட்டத்தை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்கு பயத்தை வரவழைத்தீர்;
யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை;
நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைவன் அழித்தான்.
தீர்க்கதரிசியின் மனவேதனையும் நம்பிக்கையும்
திமிங்கிலங்கள் முதற்கொண்டு மார்பகங்களை நீட்டி,
தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்;
என் மகளாகிய மக்களோ வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழியைப்போல் கடின மனமுள்ளவளாக இருக்கிறாளே.
குழந்தைகளின் நாக்கு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது;
பிள்ளைகள் உணவுகேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பவர்கள் இல்லை.
சுவையான உணவுகளைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பயனற்றுக்கிடக்கிறார்கள்;
இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்கிறார்கள்.
உதவி செய்பவர்கள் இல்லாமல், ஒரு நிமிடத்திலே அழிக்கப்பட்ட
சோதோமின் பாவத்திற்கு வந்த தண்டனையைவிட
என் மகளாகிய மக்களின் அக்கிரமத்திற்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
அவளுடைய தலைவர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும்,
பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும்,
இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள்.
இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது;
வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது;
அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு,
காய்ந்த மரத்திற்கு ஒப்பானது.
பசியினால் கொல்லப்பட்டவர்களைவிட
பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்;
அவர்கள், வயலில் விளைச்சல் இல்லாததால் பசியினால் கரைந்து போகிறார்கள்.
இரக்கமுள்ள பெண்களின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன,
என் மகளாகிய மக்களின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
யெகோவா தமது கோபத்தை நிறைவேற்றி, தமது கடுங்கோபத்தை ஊற்றி,
சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்;
அது அதின் அஸ்திபாரங்களை உடைத்துப்போட்டது.
எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப்
பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள்.
அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும்,
அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.
குருடர்களைப்போல வீதிகளில் அலைந்து,
ஒருவரும் அவர்களுடைய உடைகளைத் தொடமுடியாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
தீட்டுப்பட்டவர்களே விலகுங்கள், தொடாமல் விலகுங்கள், விலகுங்கள்,
என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
உண்மையாகவே பறந்தோடி அலைந்து போனார்கள்;
இனி தங்கியிருக்கமாட்டார்கள் என்று அந்நிய மக்களுக்குள்ளே சொல்லப்பட்டது.
யெகோவாவுடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது,
அவர்களை இனி அவர் பார்க்கமாட்டார்;
ஆசாரியர்களுடைய முகத்தைப் பார்க்காமலும் முதியோரை மதிக்காமலும்போனார்கள்.
இன்னும் எங்களுக்கு உதவி வருமென்று நாங்கள் வீணாக எதிர்பார்த்திருந்ததினாலே எங்களுடைய கண்கள் பூத்துப்போயின;
காப்பாற்றமுடியாத மக்களுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
நாங்கள் எங்கள் வீதிகளில் நடந்து செல்லாதபடி எங்கள் பாதசுவடுகளை வேட்டையாடினார்கள்;
எங்கள் முடிவு நெருங்கியது; எங்கள் நாட்கள் நிறைவேறிவிட்டது;
எங்கள் முடிவு வந்துவிட்டது.
எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைவிட வேகமாயிருந்தார்கள்;
மலைகள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்;
வனாந்திரத்தில் எங்களுக்காகப் பதுங்கியிருந்தார்கள்.
யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவனும், எங்கள் உயிர்மூச்சுமாக இருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்;
அவனுடைய நிழலிலே தேசங்களுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
ஊத்ஸ் தேசத்தைச் சேர்ந்த மகளாகிய ஏதோமே, சந்தோஷப்பட்டு மகிழ்ந்திரு;
பாத்திரம் உன்னிடத்திற்கும் வரும், அப்பொழுது நீ வெறித்து, ஆடையில்லாமல் கிடப்பாய்.
மகளாகிய சீயோனே, உன் அக்கிரமத்திற்கு வரும் தண்டனை முடிந்தது;
அவர் இனி உன்னை சிறைப்பட்டுப்போக விடமாட்டார்;
மகளாகிய ஏதோமே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்;
உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.
மீண்டும் செழிப்படைவதற்கான ஜெபம்