சங்கீதம் 120
ஆரோகண பாடல். 
 1 என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; 
அவர் எனக்குச் செவிகொடுத்தார். 
 2 யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும். 
 3 வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? 
உனக்கு என்ன செய்யப்படும்? 
 4 பலவானுடைய கூர்மையான அம்புகளும், 
சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். 
 5 ஐயோ, நான் மேசேக்கிலே * மேசேக்கு கருங்கடலுக்கும் காசுப்பியன் கடலுக்கும் மத்தியில் உள்ள பகுதியாகும். கேதார் சீரியவின் தமஸ்குக்கு தென்பகுதியில் உள்ள பகுதியாகும் இங்கு நாடோடிகள் வாழ்ந்து வந்தார்கள் இவர்கள் மிகவும் வெறித்தனமானவர்களாய் இருந்தார்கள்  வாழ்ந்தது போதும், 
கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்! 
 6 சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்! 
 7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; 
அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள். 
*சங்கீதம் 120:5 மேசேக்கு கருங்கடலுக்கும் காசுப்பியன் கடலுக்கும் மத்தியில் உள்ள பகுதியாகும். கேதார் சீரியவின் தமஸ்குக்கு தென்பகுதியில் உள்ள பகுதியாகும் இங்கு நாடோடிகள் வாழ்ந்து வந்தார்கள் இவர்கள் மிகவும் வெறித்தனமானவர்களாய் இருந்தார்கள்