அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்,
திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும்,
ஒலிவமரத்தின் பலன் இல்லாமல் போனாலும்,
வயல்கள் தானியத்தை விளைவிக்காமற்போனாலும்,
கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும்,
தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும்,
நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்,
என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
ஆண்டவராகிய யெகோவா என் பெலன்;
அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி,
உயரமான இடங்களில் என்னை நடக்கச்செய்வார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டப் பாடல்.ஆசிரியர்
அதிகாரம் 1:1 ல் செப்பனியா ஆசிரியர் தன்னை, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்கு குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூசின் குமாரன் செப்பனியா என்று தன்னை அறிமுகப்படுத்துகிறான். செப்பனியா என்பதற்கு தேவன் என்னை பாதுகாக்கிறவர் என்று அர்த்தம். எரேமியா காலத்தில் இருந்த ஒரு முக்கியமான ஆசாரியன் (21:1; 29:25, 29; 37:3; 52:24). அவனுடைய குடும்பம் ராஜாவம்சத்தோடு சம்பந்தபட்டவனாக இருக்கிறது. ஏசாயா, மீகா பிறகு, யூதாவுக்கு விரோதமான தீர்க்கதரிசனம் சொன்னவன் இவன்தான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 464 க்கும் 331 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களில் தீர்க்கதரிசனம் சொன்னான் என்று 1:1 ல் எழுதியிருக்கிறது.
யாருக்காக எழுதப்பட்டது
யூதா ஜனங்களுக்கும் உலகத்தில் வேதம் வாசிக்கிற எல்லா தேவனுடைய ஜனங்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் சர்வ வல்லவர், பாவம் செய்கிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள், நீதிமான்கள் நியாயதீர்ப்பு நாளில் பாதுகாக்கப்படுவார்கள் என்ற மூன்று கருத்துக்களையும் மனம்திரும்புகிறவர்களை, தேவன் ஆசிர்வதிக்கிறார் என்று இந்த புத்தகத்தில் உறுதிப்படுத்துகிறார்.
மையக் கருத்து
ஆண்டவரின் உக்கிரத்தின் நாள்.
பொருளடக்கம்
1. ஆண்டவரின் உக்கிரத்தின் நாளில் ஏற்படும் அழிவு. — 1:1-18
2. அழிவின் இடையிலும் நம்பிக்கை — 2:1-3
3. மற்ற தேசங்களின் அழிவு — 2:4-15
4. எருசலேமின் அழிவு. — 3:1-7
5. நம்பிக்கை, திரும்ப வருதல் — 3:8-20
ஆமோனின் மகனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எசேக்கியாவின் மகனாகிய அமரியாவுக்கு மகனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் மகன் செப்பனியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்.
யெகோவாவுடைய மாபெரும் நாள்
நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லா மக்களின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடு கூட கெம்மரீம் என்பவர்களின் பெயரையும்,
வீடுகளின்மேல் வானசேனையை வணங்குகிறவர்களையும், யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு, மல்காமின் தெய்வத்தின் பெயரிலும் ஆணையிட்டு வணங்குகிறவர்களையும்,
யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன்.
மகளாகிய சீயோனே
3:14
இஸ்ரவேல் ஜனங்களே
, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய
3:14
எருசலேம் ஜனங்களே
எருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
யெகோவா உன் ஆக்கினைகளை அகற்றி, உன் எதிரிகளை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகோவா உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்.
அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.
உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்னைக்குறித்து சந்தோஷமாக மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் உன்னை புதியவனாக்குவார்;
3:17
அமர்ந்திருப்பார்
அவர் உன்னைக்குறித்து கெம்பீரமாகக் களிகூருவார்.
உன் சபையின் மனிதர்களாயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாகக் கூட்டிக்கொள்ளுவேன்.