லேவி. 4. பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது: அபிஷேகம் பெற்ற ஆசாரியன் , மக்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவம் செய்தால், தான் செய்த பாவத்திற்காக பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.