எண். 11. பின்பு, இஸ்ரவேல் மக்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது யெகோவாவுடைய செவிகளில் தீமையாக இருந்தது; யெகோவா அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, முகாமின் கடைசியிலிருந்த சிலரை எரித்தது. அப்பொழுது மக்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; உடனே அக்கினி அணைந்துபோயிற்று. யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததால், அந்த இடத்திற்குத் தபேரா என்று பெயரிட்டான்.