நியாயாதிபதிகள். 1. யோசுவா இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: கானானியர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எங்களில் யார் முதலில் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள். அதற்குக் யெகோவா: யூதா எழுந்து புறப்படட்டும்; இதோ, அந்த தேசத்தை அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார். அப்பொழுது யூதாவின் மனிதர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய சிமியோனின் மனிதர்களை நோக்கி: நாம் கானானியர்களோடு யுத்தம்செய்ய நீங்கள் என்னுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் எங்களோடு எழுந்துவாருங்கள்; உங்களுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் நாங்களும் உங்களோடு வருவோம் என்றார்கள்; அப்படியே சிமியோன் கோத்திரத்தார்கள் அவர்களோடு போனார்கள். அங்கேயிருந்து தெபீரில் குடியிருப்பவர்களுக்கு எதிராகப் போனார்கள்; முன்நாட்களில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பெயர். அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை முறியடித்துப் பிடிக்கிறவனுக்கு என்னுடைய மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்றான். அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; எனவே, தன்னுடைய மகளாகிய அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். மனாசே கோத்திரத்தார்கள் பெத்செயான் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தானாக் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தோரில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், இப்லேயாம் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், மெகிதோவில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும் துரத்திவிடவில்லை; கானானியர்கள் அந்த தேசத்தில்தான் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள். இஸ்ரவேலர்கள் பலத்தபோது, கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல் அவர்களை கட்டாயப்படுத்தி கடினமாக வேலை செய்யவைத்தார்கள்.