நியாயாதி. 9. யெருபாகாலின் மகன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன்னுடைய தாயினுடைய சகோதரர்களிடம் போய், அவர்களையும் தன்னுடைய தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி: யெருபாகாலின் மகன்கள் 70 பேரான எல்லோரும் உங்களை ஆள்வது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மட்டும் உங்களை ஆள்வது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் சரீரமுமானவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்றான். இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று, உரத்த சத்தமிட்டுக்கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனிதர்களே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள். மரங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்செய்யும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாக இரு என்றது. அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருடங்கள் அரசாண்டபின்பு, அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனிதர்களுக்கும் நடுவே தீங்கை உண்டாக்கும் ஆவியை தேவன் வரச்செய்தார். யெருபாகாலின் 70 மகன்களுக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்தது, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனான அபிமெலேக்கின்மேலும், தன்னுடைய சகோதரர்களைக் கொல்ல அவனுடைய கைகளை பெலப்படுத்தின சீகேம் மனிதர்கள் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனிதர்கள் அபிமெலேக்குக்கு துரோகம் செய்தார்கள். பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு எதிராக முகாமிட்டு, அதைப் பிடித்தான். அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த கோபுரம் இருந்தது; அங்கே எல்லா ஆண்களும் பெண்களும் பட்டணத்து மனிதர்கள் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, கோபுரத்தின்மேல் ஏறினார்கள்.