2 சாமு. 23. தாவீதின் கடைசி வார்த்தைகள்: “மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்; யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது. இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார். அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார். என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ? தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள். அவைகளை ஒருவன் தொடப்போனால், இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான். தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன். யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான், ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா, பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன். ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி, அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,