1 நாளாக. 26. ஆலயத்தின் வாசல்காக்கிறவர்களின் பிரிவுகளாவன: கோராகியர்கள் சந்ததியான ஆசாபின் சந்ததியிலே கோரேயின் மகன் மெஷெலேமியா என்பவன், மெஷெலேமியாவின் மகன்கள் மூத்தவனாகிய சகரியாவும், யெதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் மகன்களும், மற்ற லேவியர்களில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் கவனிக்கிறவனுமாக. லாதானின் மகன்கள் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய மகன்களில் தலைமையான குடும்பத்தலைவர்களாக இருந்த யெகியேலியும், யெகியேலியின் மகன்களாகிய சேத்தாமும், அவனுடைய சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை கவனிக்கிறவர்களாக இருந்தார்கள்.