எசேக். 36. மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; பகைவர்கள் உங்களைக்குறித்து ஆ ஆ, நித்திய மேடுகள் எங்களுடையதானது என்று சொல்லுகிறபடியினால், நீ தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், நீங்கள் அந்நியதேசங்களில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாக இருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப் பேச்சும் மக்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,