தானி. 6. ராஜ்ஜியம் முழுவதையும் ஆளுவதற்காகத் தன் ராஜ்ஜியத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும், ராஜாவிற்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று அதிகாரிகளையும் ஏற்படுத்துவது தரியுவிற்கு நலமென்று காணப்பட்டது; இவர்களில் தானியேலும் ஒருவனாயிருந்தான். இப்படியிருக்கும்போது தானியேல் அதிகாரிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேலானவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்ததால் அவனை ராஜ்ஜியம் முழுவதற்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.