ஓசியா. 9. இஸ்ரவேலே, மகிழ்ச்சியாக இருக்காதே; மற்ற மக்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ வழிவிலகிப்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் கூலியை நாடுகிறாய். தானியக்களமும் திராட்சைத்தொட்டியும் அவர்களைப் பிழைக்கச்செய்வதில்லை; அவர்களுக்குத் திராட்சைரசம் ஒழிந்துபோகும்.