ஓசியா. 13. எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகாலின் விஷயத்தில் குற்றம் செய்து இறந்துபோனான். இப்போதும் அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து, தங்கள் வெள்ளியினால் செய்த சிலைகளையும், தங்கள் அறிவுக்கேற்ப உருவங்களையும் தங்களுக்கு செய்துகொள்கிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனிதர்களில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்கிறார்கள்.