தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு
வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்?
மணவாளி
கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்;
அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்;
அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும்,
உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்;
நேசம் மரணத்தைப்போல் வலிமையானது;
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது;
அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது.
திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது,
வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது;
ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும்,
அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும்
8:7
அவன் முற்றிலும் அசட்டைசெய்யப்படும்
.
மணவாளியின் சகோதரன்
நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு,
அவளுக்கு மார்பகங்கள் இல்லை;
நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
அவள் ஒரு மதிலானால்,
அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்;
அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
மணவாளி
நான் மதில்தான்,
என் மார்பகங்கள் கோபுரங்கள்;
அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன்.
மணவாளன்
பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது,
அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக,
ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக்
8:11
கிராம வேலைக்காரனின் ஒரு நாள் கூலி
கொண்டுவரும்படி விட்டார்.
என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது;
சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும்,
அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
தோட்டங்களில் குடியிருக்கிறவளே!
தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்;
நானும் அதைக் கேட்கட்டும்.
மணவாளி
என் நேசரே! விரைவாக வாரும்,
கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள
வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.ஆசிரியர்
ஏசாயா புத்தகத்தின் பெயர், ஆசிரியர் ஏசாயா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் ஒரு தீர்க்கதரிசினியை மணந்தவர். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தன. (ஏசாயா 7:3; 8:3). ஏசாயா யூதா தேசத்தின் இராஜாக்களாகிய, உசியா, யோதாம், ஆகாஸ் எசேக்கியா என்பவர்களின் நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தவன். ஏசாயா 1:1; பொல்லாத இராஜவாகிய மனாசேயின் ஆட்சியில் மரணத்தை அடைந்ததாக கருதப்படுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்:
ஏறக்குறைய கிமு 740 க்கும் 680 கிமுக்கும். இடையில் எழுதப்பட்டது.
உசியா இராஜாவின் கடைசி நாட்களிலிலும் யோதாம், ஆகாஸ் எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும் எழுதப்பட்டதாக எண்ணப்படுகிறது.
யாருக்காக எழுதப்பட்டது?
முதலாவதாக தேவனின் கட்டளைக்கு கீழ்படியாத யூத தேசத்தின் ஜனங்களுக்கும் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள்.
எழுதப்பட்ட நோக்கம்:
பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி விரிவான காரியங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வருகையின் நோக்கம் (ஏசாயா. 40:3-5), அவருடைய கன்னிப்பிறப்பு (7:14), அவர் நற்செய்தியை பிரசங்கித்தல் (61:1), அவருடைய பலியான மரணம் (52:13-53:12) தன் ஜனங்களை தம்மிடம் சேர்த்துக் கொள்ள திரும்ப வருதல். (60:2-3). ஆகியவைகளாகும். முக்கியமாக யூதா தேசத்தின் மக்களுக்கு தீர்க்கத்தரிசனம் சொல்ல அழைக்கப்பட்டவன். யூத தேசத்தில் எழுப்புதல்களும் கீழ்படியமைகளும் நடந்துக்கொண்டு இருந்தன. யூத தேசத்திற்கு அசீரிய தேசத்திலிருந்தும் எகிப்து தேசத்திலிருந்தும் அழிவுக்கான பயமுறுத்தல்கள் வந்துகொண்டிருந்ததது ஆனால் தேவனுடைய இரக்கத்தால் காக்கப்பட்டார்கள் ஏசாயா, பாவத்திலிருந்து மனம்திரும்பும் செய்திகளையும், வருங்காலத்தில் தேவனுடைய விடுதலைக்காக நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கும் செய்திகளையும் அறிவித்தான்.
மையக் கருத்து:
இரட்சிப்பு
பொருளடக்கம்:
1. யூத தேசத்திற்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் — 1:1-12:6
2. பிற நாடுகளுக்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் — 13:1-23:18
3. வருங்கால உபத்திரவங்கள் — 24:1-27:13
4. இஸ்ரவேல், யூத தேசங்களுக்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் — 28:1-35:10
5. எசேக்கியா, ஏசாயாவின் சரித்திரம். — 36:1-38:22
6. பாபிலோனின் காரியங்கள் — 39:1-47:15
7. தேவ திட்டமான சமாதான அறிவிப்புகள். — 48:1-66:24
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் ஆட்சியின் காலங்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி.
கலகக்கார தேசம்
வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; யெகோவா பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாகக் கலகம்செய்தார்கள்.
மாடு தன் எஜமானையும், கழுதை, தான் உணவு உண்ணும் இடத்தையும் அறியும்; இஸ்ரவேலர்களோ அறிவில்லாமலும், என் மக்கள் உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்கிறார்.
ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; யெகோவாவைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைவடிவ கழுத்தணிகளையும்,
ஆரங்களையும், வளையல்களையும், தலைமுக்காடுகளையும்,
தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
விநோத உடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,
கண்ணாடிகளையும், மெல்லிய ஆடைகளையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் கழற்றிப்போடுவார்.
தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகும்வரை, வீட்டுடன் வீட்டைச் சேர்த்து, வயலுடன் வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ,
சேனைகளின் யெகோவா என் காது கேட்கச் சொன்னது: உண்மையாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.
பத்து ஏர் நிலமாகிய திராட்சைத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்.
சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி அமர்ந்திருந்து, இருட்டிப்போகும்வரை குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ,
அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் யெகோவாவின் செயலை கவனிக்கிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.
யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடன் பேசி, நான் இந்த மக்களின் வழியிலே நடக்காமலிருக்க எனக்குச் சொன்ன புத்திமதி என்னவென்றால்:
இந்த மக்கள் கட்டுப்பாடு என்று சொல்கிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
சேனைகளின் யெகோவாவையே பரிசுத்தர் என்று எண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.
அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் யூதா, இஸ்ரவேல், இரண்டு கோத்திரத்திற்கும் தடுக்கி விழச்செய்யும் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிமக்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
அக்காலத்திலே, மக்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக மக்கள்கூட்டம் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தங்கும் இடம் மகிமையாயிருக்கும்.
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், தூரமான கடலிலுள்ள தீவுகளிலும், தம்முடைய மக்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்முறை தமது கரத்தை நீட்டி,
கடலில் பயணம்செய்கிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.
வனாந்திரமும், அதின் ஊர்களும், கேதாரியர்கள் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடுவதாக; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, மலைகளின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.
யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.
யெகோவா பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, போர்வீரனைப்போல் வைராக்கியமடைந்து, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய எதிரிகளை மேற்கொள்ளுவார்.
வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து, இரகசிய இடங்களில் இருக்கிற பொக்கிஷங்களையும், மறைவிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு பெயர் சூட்டினேன்.
நானே யெகோவா, வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது மறைகிறகிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே யெகோவா, வேறொருவர் இல்லை.
எழும்பு, எழும்பு, யெகோவாவுடைய கடுங்கோபத்தின் பாத்திரத்தை அவருடைய கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
அவள் பெற்ற மக்கள் அனைவருக்குள்ளும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த மகன்கள் எல்லோரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.
இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உன்னை ஆறுதல்படுத்துகிறவன் யார்? பாழாகுதலும், அழிவும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உன்னை ஆறுதல்படுத்துவேன்?
உன் மகன்கள் தளர்ந்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்கிய கலைமானைப்போல, அனைத்து வீதிகளின் முனையிலும், யெகோவாவுடைய கடுங்கோபத்தினாலும், உன் தேவனுடைய கடிந்துகொள்ளுதலினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.
வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, தடைகளை என் மக்களின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தின்காரணமாக கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாக நடந்தார்களே.
ஆ, உமது நாமத்தை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்கும், தேசங்கள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,
தேவரீர் வானங்களைக் கிழித்து இறங்கி, உருக்கும் அக்கினி எரிவதைப்போலவும், நெருப்பு தண்ணீரைப் பொங்கச் செய்வதைப்போலவும், மலைகள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும்.
நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் மலைகள் உருகிப்போயின.
தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன்.
நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் மக்களின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.
அங்கே இனி குறைந்த ஆயுள் உள்ள சிறுவனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் இருக்கமாட்டார்கள்; நூறு வயதுசென்று மரணமடைகிறவனும் வாலிபனென்று கருதப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.